Home
Mobile

சிதறவிட்ட Xiaomi.. 200MP கேமரா.. 6800mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

சியோமி நிறுவனத்தின் பிரீமியம் கேமரா மாடலான சியோமி 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) இந்திய மார்கெட்டில் விரைவில் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 200 எம்பி லெய்கா கேமரா, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஎல்இடி டிஸ்பிளே, IP69 ரேட்டிங் போன்ற பீச்சர்களை கொடுக்க உள்ளது. இந்த சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பிஐஎஸ் (BIS) சர்டிபிகேஷனுக்கு வந்துவிட்டது. ஆகவே, 2026 ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் எதிர்பார்க்கலாம். இதற்கிடையில் குளோபல் வெளியீடு இருந்தால், மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கலாம். பிஐஎஸ் சர்டிபிகேஷனுக்கு வந்துவிட்டாலே, ஓரிரு மாதங்களில் ஸ்மார்ட்போன் வெளியாகிவிடும் என்பது குறிப்பிட வேண்டி உள்ளது.

சிதறவிட்ட Xiaomi.. 200MP கேமரா.. 6800mAh பேட்டரி.. 90W சார்ஜிங்!

இந்த விவரங்களை தவிர மற்ற பீச்சர்கள் அல்லது விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், சீன மார்கெட்டில் இந்த சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு கிடைத்த பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஏனென்றால், இந்த பீச்சர்களை இந்தியா மற்றும் குளோபல் மார்கெட்டில் வெளியாகும் வெர்ஷனிலும் கிடைக்கும்.

சியோமி 17 அல்ட்ரா அம்சங்கள் (Xiaomi 17 Ultra Specifications): ஆக்டா கோர் ஸ்னாடிராகன் 8 எலைட் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட்டை இந்த சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. அட்ரினோ 840 ஜிபியு ( Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைத்துள்ளது. மேலும், சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3.0 (Xiaomi HyperOS 3.0) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கிடைத்து உள்ளது.

6.9 இன்ச் (2608 x 1200 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைத்துள்ளது. இதில் 2K ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கிடைக்கிறது. 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் சியோமி ஷீல்டு கிளாஸ் 3.0 (Xiaomi Shield Glass 3.0) கிடைக்கிறது.

50 எம்பி லெய்கா பிரைமரி கேமரா கிடைக்கிறது. இதில் லைட் ப்யூசன் 1050எல் (Light Fusion 1050L) சென்சார் வருகிறது. ஓஐஎஸ் டெக்னாலஜி உள்ளது. மேலும், 50 எம்பி லெய்கா அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் சூப்பர் மேக்ரோ லென்ஸ் கிடைக்கிறது. 200 எம்பி லெய்கா சூப்பர் டெலிபோட்டோ கேமரா கொண்டுள்ளது. இதில் எச்பிஇ சென்சார் உள்ளது.

மேலும், 4.3 எக்ஸ் ஆப்டிகல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ, 30 செ.மீ டெலிபோட்டோ மேக்ரோ மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. 4K மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கு 50 எம்பி செல்பீ கேமரா கிடைத்துள்ளது. 6800mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங்கை இந்த சியோமி 17 அல்ட்ரா கொண்டுள்ளது.

மேலும், 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. IP66 + IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்டுள்ளது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.90,000 பட்ஜெட்டுக்குள் இருக்கிறது. இது சீன மார்கெட் விலையாக இருக்கிறது. இந்தியாவில் சில பீச்சர்கள் மாறுபடலாம். ஆகவே, விலையிலும் மாற்றம் இருக்கும். ஓரிரு மாதங்களில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 17 Ultra With 6800mAh Battery Snapdragon 8 Elite Gen 5 Chip Launching in India Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X