Xiaomi நீ சிங்கம் தான்.. 200MP டெலிபோட்டோ, 6800mAh பேட்டரி, 16GB ரேம், 1TB மெமரி உடன் புது போன் அறிமுகம்!
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் சீரீஸ் ஆன ஷாவ்மீ 17 சீரீஸின் கீழ் நான்காவது மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) ஸ்மார்ட்போன் ஆகும். இது ஷாவ்மீ 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) ஸ்மார்ட்போனிற்கு பிகு வரும் "அல்ட்ரா" மாடல் ஆகும்
இந்த ஸ்மார்ட்போன் அதன் முன்னோடியை விட பேட்டரி, சிப்செட், செயல்திறன் மற்றும் கேமராக்கள் என கிட்டத்தட்ட எல்லா டிப்பார்ட்மென்ட்களிலுமே மேம்படுத்தல்களை வழங்குகிறது. அப்படி ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? இதோ விவரங்கள்:

ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- Android 16 ஓஎஸ் அடிப்படையிலான HyperOS 3 ஓஎஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 1060 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.9-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா கோர் 3nm ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- அட்ரெனோ 840 GPU
- 16GB வரை LPDDR5x அல்ட்ரா ரேம்
- 1TB UFS 4.1 ஆன்போர்டு ஸ்டோரேஜ்
- Leica-வால் டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 1-இன்ச் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் LOFIC Omnivision 1050L ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் Samsung JN5 அல்ட்ராவைடு கேமரா
- 3.2x முதல் 4.3x வரை தொடர்ச்சியான ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 200-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 8K ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 50-மெகாபிக்சல் OV50M செல்பீ கேமரா
- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,800mAh பேட்டரி
- 5G, 4G LTE, USB டைப்-சி போர்ட், NFC, Wi-Fi 7 மற்றும் ப்ளூடூத் 5.4
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- 3D அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 8.29 மிமீ
- எடையில் சுமார் 224 கிராம்
ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை: 12 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பேஸிக் ஆப்ஷன் ஆனது இந்திய ரூபாய் மதினின்படி தோராயமாக ரூ.90,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதே ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.96,000 க்கும், கடைசியாக உள்ள ஹை எண்ட் 16 ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,09,000 க்கும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இதோடு சேர்த்து ஷாவ்மீ 17 அல்ட்ரா லைக்கா எடிஷன் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யபட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,02,000 க்கும், மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,15,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
லைக்கா எடிஷன் ஆனது பிளாக் மற்றும் ஒயிட் நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி அன்று சீனாவில், ஷாவ்மீ ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வரும். இது பிளக்க, ஒயிட், கோல்ட் ஸ்மோக்கி பர்பிள் மற்றும் ஸ்டார் க்ரீன் (சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது) ஆகிய கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இந்திய அறிமுகம் நிச்சயம் நடக்கும்; ஆனால் இப்போதைக்கு சரியான வெளியீட்டு தேதி குறித்த விவரங்கள் இல்லை.


Click it and Unblock the Notifications








