அடுத்த வாரம் வருகிறது புது Xiaomi 5ஜி போன்.. 200MP கேமரா.. 16ஜிபி ரேம்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் அடுத்த வாரம் சியோமி 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். இந்நிலையில் இந்த புதிய சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
சியோமி 17 அல்ட்ரா அம்சங்கள் (Xiaomi 17 Ultra Specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 chipset) சிப்செட் உடன் இந்த புதிய சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

50எம்பி OV50X 1-இன்ச் மெயின் சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதியும் இந்த புதிய சியோமி ஸ்மார்ட்போனில் உள்ளது.
அதேபோல் இந்த போன் 6.7-இன்ச் டிஸ்பிளே உடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவு இந்த சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர் (Stereo Speaker), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) போன்ற பல அசத்தலான வசதிகளுடன் இந்த சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
7000mAh பேட்டரி உடன் சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 80W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. ஆகவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி, என்எஃப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த புதிய சியோமி ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








