டிசம்பர் 25-ல் சம்பவம் இருக்கு.. 200எம்பி கேமரா.. 6800mAh பேட்டரி.. வருகிறது சியோமி போன்.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் வரும் டிசம்பர் 25-ம் தேதி சீனாவில் சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த புதிய சியோமி போனின் முக்கிய அம்சங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
சியோமி 17 அல்ட்ரா அம்சங்கள் (Xiaomi 17 Ultra specifications): Leica-டியூன் செய்யப்பட்ட 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா + 1-இன்ச் OmniVision OV50X சென்சார் கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் இந்த சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக டிஎஸ்எல்ஆர் கேமராக்களை போன்று இந்த போனின் மூலம் துல்லியமான படங்களை எடுக்க முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா உடன் இந்த போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த புதிய சியோமி போனில் உள்ளன. குறிப்பாக சியோமி 17 அல்ட்ரா போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 SoC) உடன் சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) உடன் சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), 4500 வரை நிட்ஸ் பீக் பிரைட்னஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உடன் இந்த புதிய போன் வெளியாகும். அதேபோல் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த புதிய சியோமி ஸ்மார்ட்போனில் உள்ளதாக கூறப்படுகிறது.

6800mAh பேட்டரி உடன் சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 80W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர் (Stereo Speaker), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) போன்ற அம்சங்களும் இந்த சியோமி போனில் இருக்கும். மேலும் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஆன்லைனில் கசிந்த தகவலின்படி சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன ரூ.1,24,999 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








