மாப்பிள்ளைக்கு அவ்ளோ வெறி.. விற்பனைக்கு வந்த முதல் நாளே விற்று தீர்ந்த Xiaomi போன்!
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் சில தினங்களுக்கு முன்பாக.. சரியாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி அன்று, அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருந்தது. அது ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) மற்றும் ஷாவ்மீ 17 அல்ட்ரா லைக்கா எடிஷன் (Xiaomi 17 Ultra Leica Edition) ஸ்மார்ட்போன்கள் ஆகும்.
இதில் ஷாவ்மீ 17 அல்ட்ரா லைக்கா எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் விற்பனைக்கு வரும் முன்பே விற்றுத் தீர்ந்து உள்ளதாகவும், மேலும் "ஆரம்பகால வாங்குபவர்களுக்கு" ஷிப்பிங் செய்யப்படுவதற்கு முன்பே, ரீசெல்லர்கள் இந்த ஸ்மார்ட்போனை செக்கென்ட ஹேண்ட் தளத்தில் பட்டியலிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆக இந்த ஸ்மார்ட்போனை "அடித்து புடித்து" முன்பதிவு செய்தவர்கள் அனைவரும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ளவர்கள் அல்ல என்பது போல் தெரிகிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த மாடலின் முதல் விற்பனை (இன்று) டிசம்பர் 27 தான் தொடங்கியது. ஆனால் டிசம்பர் 25 அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைத்தது.
அந்த நேரத்தில் பலரும் ஷாவ்மீ 17 அல்ட்ரா லைக்கா எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை முன்பதிவு செய்து உள்ளனர், மேலும் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை ஷிப்பிங் செய்ய தொடங்கிய உடனேயே அதை மறுவிற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று கிஸ்மோசீனா (GizmoChina) வலைத்தளம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
ஷாவ்மீ 17 அல்ட்ரா லைக்கா எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம்: இந்த ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,02,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதே ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.1,15,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 3 ஓஎஸ்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1060 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.9-இன்ச் 1.5K ஏ எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- அட்ரெனோ 840 ஜிபியு
- 16 ஜிபி வரை LPDDR5x அல்ட்ரா ரேம்
- 1டிபி யுஎப்எஸ் 4.1 ஆன்போர்டு ஸ்டோரேஜ்
- லைக்கா-வால் டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 1-இன்ச் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் LOFIC ஆம்னிவிஷன் 1050எல் ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் சாம்சங் ஜேஎன்5 அல்ட்ராவைடு கேமரா
- 3.2x முதல் 4.3x வரை தொடர்ச்சியான ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 200-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 8கே ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 50-மெகாபிக்சல் OV50M செல்பீ கேமரா
- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,800mAh பேட்டரி
- 5ஜி, 4ஜி LTE, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி, வைஃபை 7 மற்றும் ப்ளூடூத் 5.4
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- 3D அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 8.29 மிமீ
- எடையில் சுமார் 224 கிராம்


Click it and Unblock the Notifications








