கொம்பன் இறங்கிட்டான்.. Xiaomi Leica Edition போன்.. 200MP பெரிஸ்கோப், 16GB ரேம், 6800mAh பேட்டரி!
நேற்று வரையிலாக ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் அதன் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆன ஷாவ்மீ 17 (Xiaomi 17) மற்றும் ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) ஆகிய 2 மாடல்களை மட்டுமே உலகளவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது ஷாவ்மீ நிறுவனம் அதன் ஷாவ்மீ 17 சீரீஸி கீழ் ஷாவ்மீ அல்ட்ரா லைக்கா எடிஷன் (Xiaomi 17 Ultra Leica Edition) ஸ்மார்ட்போனையும் சேர்த்து, மொத்தம் 3 மாடல்களை உலகளவில் அறிமுகம் செய்யலாம் என்கிற தகவல் கிடைத்து உள்ளது.

உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக ஷாவ்மீ 17 அல்ட்ரா லைக்கா எடிஷன் ஸ்மார்ட்போன் கீக்பெஞ்ச்சில் (Geekbench) வெளிவந்து உள்ளது, கூடவே முக்கிய செயல்திறன் மற்றும் ஏஐ தொடர்பான விவரங்களையும் வெளிப்படுத்துகிறது. ஆக ஷாவ்மீ 17 சீரீஸின் கீழ் 3 மாடல்கள் அறிமுகமாவது கிட்டத்தட்ட உறுதி ஆகி விட்டது.
எக்ஸ்பெர்ட்பிக் (XpertPick) வழியாக கிடைத்துள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 25128PNA1G என்கிற மாடல் நம்பரின் கீழ் காணப்பட்டுள்ள லைக்கா எடிஷன் ஆனது, பட செயலாக்கம், குரல் அங்கீகாரம் மற்றும் நிகழ்நேர கணக்கீட்டு புகைப்படம் எடுப்பதற்கான மேம்பாடுகள் போன்ற வலுவான ஏஐ பணிகளுக்காக ட்யூன் செய்யப்பட்டுள்ளது.
இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 ப்ராசஸர் (Snapdragon 8 Elite Gen 5 processor) உடன் அறிமுகம் செய்யப்படலாம், மேலும் இது 16GB ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 16 உடன் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆக இது ஷாவ்மீ நிறுவனத்தின் ஹைப்பர்ஓஎஸ் 3 இன்டர்பேஸை இயக்கலாம்
சீனாவில் அறிமுகமான ஷாவ்மீ 17 அல்ட்ரா லைக்கா எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,02,000 க்கும், மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,15,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான HyperOS 3 ஓஎஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 1060 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.9-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா கோர் 3nm ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- அட்ரெனோ 840 GPU
- 16GB வரை LPDDR5x அல்ட்ரா ரேம்
- 1TB UFS 4.1 ஆன்போர்டு ஸ்டோரேஜ்
- Leica-வால் டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 1-இன்ச் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் LOFIC Omnivision 1050L ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் Samsung JN5 அல்ட்ராவைடு கேமரா
- 3.2x முதல் 4.3x வரை தொடர்ச்சியான ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 200-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 8K ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 50-மெகாபிக்சல் OV50M செல்பீ கேமரா
- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,800mAh பேட்டரி
- 5G, 4G LTE, USB டைப்-சி போர்ட், NFC, Wi-Fi 7 மற்றும் ப்ளூடூத் 5.4
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- 3D அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 8.29 மிமீ
- எடையில் சுமார் 224 கிராம்


Click it and Unblock the Notifications