வா தலைவா வா.. OLED டிஸ்பிளே.. 200எம்பி கேமரா.. வருகிறது புதிய Xiaomi போன்.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சியோமி 17 அல்ட்ரா மாடல் சீனாவில் அறிமுகமாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளது. குறிப்பாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சியோமி 17 அல்ட்ரா அம்சங்கள் (Xiaomi 17 Ultra Specifications): 6.8-இன்ச் 1கே எம்10 12-பிட் ஒஎல்இடி (1.5K M10 12-bit OLED) டிஸ்பிளே உடன் இந்த சியோமி 17 அல்ட்ரா அல்ட்ரா போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன், 1920Hz PWM டிம்மிங், டிசி டிம்மிங், சியோமி டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் (Xiaomi Dragon Crystal Glass) உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் உடன் இந்த சியோமி 17 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும் வகையில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய சியோமி போனில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போன் குவால்காம் AI எஞ்சின், ஹைப்பர் AI டூல் ஆதரவுகளையும் கொண்டுள்ளது.
Leica கேமரா செட்டப் உடன் இந்த போன் வெளிவரும் அதன்படி OIS ஆதரவு கொண்ட 50எம்பி லைட் மெயின் சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 200எம்டெலிபோட்டோ லென்ஸ் + மேக்ரோ கேமரா என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த கேமராக்கள் 8கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு கொண்டுள்ளன.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த புதிய சியோமி போனில் உள்ளது. குறிப்பாக இந்த செல்பி கேமரா 4கே வீடியோ ரெக்கார்டிங் செய்யும். இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த சியோமி போனில் உள்ளன.
குறிப்பாக அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
6500mAh அல்லது 7000mAh பேட்டரி உடன் இந்த சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் இருக்கும். இதுதவிர பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. பின்பு இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








