Home
Mobile

Xiaomi ஒரே போடு.. 6000mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 200MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. குளோபல் வெர்ஷன் ரெடியாச்சு!

சியோமி நிறுவனத்தின் அல்ட்ரா பிரீமியம் கேமரா மாடலான சியோமி 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) குளோபல் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்த நேரத்தில் விலை, கலர் மற்றும் பேட்டரி பீச்சர்கள் கசிந்துள்ளன. பேட்டரியில் சீன வெர்ஷனைவிட கேபாசிட்டி கம்மியாக இருக்கிறது. இந்த சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் கடந்த டிசம்பர் மாதம் இந்த சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியாகியது. பிரீமியம் கேமரா மற்றும் டிஸ்பிளே பீச்சர்களுடன் அறிமுகம் செய்யப்பட்டதால், நல்ல வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் குளோபல் வெளியீடு மீதான எதிர்பார்ப்பும் எகிறியது. இந்தியாவில் சியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியாகிவிட்டது.

Xiaomi ஒரே போடு.. 6000mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 200MP கேமரா மாடல்!

ஆகவே, இந்த சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனையும் குளோபல் வெளியீட்டை அடுத்து எதிர்பார்க்கலாம். இப்போது, இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி, விலை மற்றும் கலர் விவரங்கள் கசிந்துள்ளன. டிப்ஸ்டர் அர்சென் லூபின் வழியாக இந்த விவரங்கள் கசிந்துள்ளன. ஆகவே, குளோபல் வேரியண்ட்டில் 6000mAh பேட்டரி மட்டுமே கிடைக்க இருக்கிறது.

சீன வேரியண்ட்டில் 6800mAh பேட்டரி கிடைத்தது. ஆனால், குளோபல் வேரியண்ட்டில் கேபாசிட்டி குறைக்கப்பட்டு உள்ளது. மேலும், சீனாவில் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.96,000 பட்ஜெட்டில் இருந்தது. ஆனால், குளோபல் வேரியண்ட்டின் விலை ரூ.1,60,100 ஆக இருக்கப் போகிறது. ஒயிட் (White), பிளாக் (Black) மற்றும் கிரீன் (Green) கலர்களில் உள்ளது.

மற்ற பீச்சர்களை, சீன வேரியண்ட்டில் கிடைத்தை எதிர்பார்க்கலாம். பிப்ரவரி மாத இறுதியில் இந்த சியோமி 17 அல்ட்ரா குளோபல் மார்கெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, மார்ச் மாதத்தில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ள சீன வேரியண்ட்டை பார்க்க வேண்டி இருக்கிறது.

சியோமி 17 அல்ட்ரா அம்சங்கள் (Xiaomi 17 Ultra Specifications): 6.9 இன்ச் (2608 x 1200 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 2K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது. மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), டால்பி விஷன் (Dolby Vision), 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3.0 (Xiaomi HyperOS 3.0) கிடைத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமராவில் 1 இன் லைட் ப்யூஷன் 1050எல் சென்சார் கிடைக்கிறது.

மேலும், ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு கேமராவில் 5cm சூப்பர் மேக்ரோ கிடைக்கிறது. மேலும், 200 எம்பி சூப்பர் டெலிபோட்டோ கேமராவில் எச்பிஇ இமேஜ் சென்சார் கிடைக்கிறது. இதில் 30cm டெலிபோட்டோ மேக்ரோ கிடைக்கிறது. மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

50 எம்பி டெலிபோட்டோ கேமராவை கொடுத்துள்ளது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. 6800mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 3டி அல்ட்ரா சோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 17 Ultra Global Variant Tipped To Launch With 6000mAh Battery Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X