Home
Mobile

மார்கெட்டின் புது கேமரா கிங்.. லாஸ்லெஸ் ஜூமிங் உடனான 200MP டெலிஃபோட்டோ கேமரா.. புது Xiaomi போன்!

ஷாவ்மீ நிறுவனம் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் தனது புதிய கேமரா கிங்-ஐ அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அது ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) ஸ்மார்ட்போன் ஆகும். சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள் குறித்த விவரங்கள் லீக் ஆகி மொபைல் மார்க்கெட்டில் சலசலப்பை கிளப்பியுள்ளன.

ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் கேமராக்கள்: ஷாவ்மீடைம் (XiaomiTime) வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையின்படி, ஷாவ்மீ 16 அல்ட்ரா ஸ்மார்ட்போனிற்கான போட்டோகிராஃபி கிட்டில் நான்காவது சென்சாருக்கான எந்த ஓப்பனிங்கும் இல்லை. இது - ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம் என்பதை குறிக்கிறது.

லாஸ்லெஸ் ஜூமிங் உடனான 200MP டெலிஃபோட்டோ கேமரா.. புது Xiaomi போன்!

நினைவூட்டும் வண்ணம் ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போநானாடு குவாட் ரியர் கேமரா யூனிட் உடன் அறிமுகமானது. சீனாவை தளமாகக் கொண்ட இந்நிறுவனம் கேமராக்களின் எண்ணிக்கையை விட குறிப்பிட்ட குவிய நீளம் (focal lengths) மற்றும் சென்சார் அளவுகளை (sensor sizes) மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவது போல் தெரிகிறது

ஆக ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் OVX10500U சென்சார் கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, S5KHPE சென்சார் கொண்ட 200 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் OV50M அல்லது S5KJN5 சென்சார் கொண்ட 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர் உள்ளிட்ட மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

செல்பீ கேமராவை பொறுத்தவரை ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 50-மெகாபிக்சல் OV50M செல்பீ கேமராவை கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ - ஷாவ்மீடைம் வழியாக கிடைத்துள்ள இந்த லேட்டஸ்ட் லீக் ஆனது ஷாவ்மீ 17 அல்ட்ராவில் 200-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா இருக்கும் என்ற முந்தைய லீக்ஸ்களை உறுதிப்படுத்துகிறது.

குறிப்பிட்ட 200எம்பி கேமராவானது "மல்டி-ஃபோகல்-லெங்த் லாஸ்லெஸ் ஜூம்" மற்றும் "டெலிஃபோட்டோ மேக்ரோ" திறன்களுக்கான 4x4 RMSC ஆதரவை கொண்டு வரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த சென்சார் "ஹை டைனமிக் ரேஞ்ச்" உடன் மேம்பட்ட உருப்பெருக்க விகிதங்கள் (magnification ratios) மற்றும் ஃபோகஸ் வரம்பையும் (focus range) வழங்கலாம்.

முன்னதாக அறிமுகமான ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.73-இன்ச் WQHD+ LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- லைக்கா டியூன் செய்யப்பட்ட குவாட் ரியர் கேமரா யூனிட்

- 50-மெகாபிக்சல் ப்ரைமரி LYT-900 சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்)
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- OIS மற்றும் 3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி IMX858 டெலிஃபோட்டோ கேமரா
- OIS மற்றும் 4.3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 200-மெகாபிக்சல் ISOCELL HP9 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார்

- 90W வயர்டு மற்றும் 80W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5410mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 7, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யூஎஸ்பி 3.2 டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்

ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை: இந்தியாவில் ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. யூஎஸ்பி டைப்-சி கேமரா ஹேண்டில், 2,000mAh பேட்டரி மற்றும் பிரிக்கக்கூடிய ஷட்டர் பட்டன் கொண்ட ஷாவ்மீ 15 அல்ட்ரா போட்டோகிராஃபி கிட் லெஜெண்ட் எடிஷன் ரூ.11,999 க்கு அறிமுகம் செய்யப்படடது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 17 Ultra Could be New Camera King in Mobile Market Full Camera Specs leaked Including 200MP
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X