iPhone கேமராலாம் ஜுஜுபி.. மார்கெட்டின் புது கேமரா கிங்.. LOFIC டெக், 200MP டெலிபோட்டோ.. Xiaomi புது போன்!
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் ஆனது "பிளாக்ஷிப் கேமரா போன்களுக்கு எல்லாம் ஒரு ராஜாவாக" இருக்கும் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அது ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) ஸ்மார்ட்போன் ஆகும். அறிமுகத்திற்கு முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் குறித்து சில முக்கிய விவரங்கள் கிடைத்துள்ளது.
நம்பகமான டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் சமீபத்திய அறிக்கையின்படி, ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது நெக்ஸ்ட் ஜெனரேஷன் லோஃபிக் டெக்னலாலஜி (Next-generation LOFIC technology) மற்றும் மேம்படுத்தப்பட்ட பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் (Upgraded periscope telephoto lens) உடன் வரும்.

அதாவது ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது எப்/1.6 அபெர்க்ஷர் கொண்ட ஒரு பெரிய ப்ரைமரி கேமரா சென்சாரை கொண்டிருக்கும். இது மேம்பட்ட லைட் ஹேண்ட்லிங் மற்றும் ரெட்யுஸ்டு க்ளாரை (Light handling and reduced glare) வழங்கும் அடுத்த தலைமுறை லோஃபிக் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படும்.
மேலும் இதன் கேமரா அமைப்பில் எப்/4.5 அபெர்க்ஷர் இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, இது குறைந்த ஒளி செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த தெளிவை மேம்படுத்தலாம். இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக, 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் (200 megapixel periscope telephoto lens) இருக்கும்.
இது எப்/8.6 க்கு அருகிலான அபெர்க்ஷர் உடன் சிறந்த நடுத்தர மற்றும் நீண்ட தூர ஜூமிங் திறனை வழங்கலாம். இந்த பெரிஸ்கோப் லென்ஸ் ஆனது ஷாவ்மீ நிறுவனத்தின் பிரத்யேக ஃபுல்-லென்ஸ் ஆப்டிகல் அமைப்பை பயன்படுத்தும் என்றும், இது மேம்பட்ட ஃபோகஸ்-ஐ வழங்கும் என்று கூறப்படுகிறது. இதெல்லாம் ஒரு தனித்துவமான சர்குலர் கேமரா டிசைனில் உட்பொதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? சீன அறிமுகத்தை தொடர்ந்து இது நிச்சயமாக இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம். ஏனென்றால் ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது இந்திய சந்தைக்கு வந்தது. நினைவூட்டும் வண்ணம் ஷாவ்மீ 15 அல்ட்ரா ரூ.1,09,999 க்கு அறிமுகமானது. ஆக ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ரூ.1.20 லட்சத்திற்குள் என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.
முன்னதாக அறிமுகமான ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்:
- லைக்கா டியூன் செய்யப்பட்ட குவாட் ரியர் கேமரா யூனிட்
- 50-மெகாபிக்சல் ப்ரைமரி LYT-900 சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்)
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- OIS மற்றும் 3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி IMX858 டெலிஃபோட்டோ கேமரா
- OIS மற்றும் 4.3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 200-மெகாபிக்சல் ISOCELL HP9 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் மற்ற முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.73-இன்ச் WQHD+ LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 90W வயர்டு மற்றும் 80W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 5410mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யூஎஸ்பி 3.2 டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்


Click it and Unblock the Notifications