Xiaomi-யின் புது சிங்கக்குட்டி.. 6800mAh பேட்டரி, 100W சார்ஜிங், 200MP டெலி கேமரா.. வாய் பிளக்க வைக்கும் விலை!
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் ஆனது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு புதிய "ராஜா"வை களமிறக்க உள்ளது. அது ஷாவ்மீ 17 அல்ட்ரா () ஸ்மார்ட்போன் ஆகும். பெயர் குறிப்பிடுவது போலவே இது ஷாவ்மீ 17 சீரிஸின் டாப்-ஆப்-தி-லைன் மாடலாக விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது
எதிர்பார்க்கப்படும் அறிமுகத்திற்கு முன்னதாக, ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன், சார்ஜிங் ஸ்பீட் மற்றும் கலர் ஆப்ஷன்கள் பற்றிய விவரங்கள் லீக் ஆகியுள்ளன. நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான பால்ட் பாண்டா வழியாக கிடைத்துள்ள தகவல்கலின்படி - ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6800mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படலாம். இது 100W வயர்டு சார்ஜிங் ஆதரவு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கலாம். நினைவூட்டும் வண்ணம் முன்னதாக அறிமுகமான ஷாவ்மீ 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) மாடலில் 5410mAh பேட்டரி உள்ளது மற்றும் இது 90W (வயர்டு) மற்றும் 80W (வயர்லெஸ்) ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை வழங்குகிறது.
ஆக ஒப்பீட்டளவில் வரவிருக்கும் ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது அதன் முன்னோடியை (அதாவது ஷாவ்மீ 15 அல்ட்ரா மாடலை) விட சற்று பெரிய பேட்டரி பேக்கை கொண்டிருக்கும். இருப்பினும், இது 7500mAh கெப்பாசிட்டியை கொண்டுள்ள ஷாவ்மீ 17 ப்ரோவின் பேட்டரியை விட சிறியதாகவே இருக்கும்.
கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது பிளாக், க்ரீன், பர்பிள் மற்றும் ஒயிட் ஆகிய 4 கலர்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் பிளாக் மற்றும் க்ரீன் கலர் ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளன.
ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்காலம்?
- 77.6மிமீ அகலம் மற்றும் 8மிமீ தடிமன்
- 227 கிராம் எடை
- லைக்கா (Leica) கேமரா யூனிட்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 50-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 200-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
ஷாவ்மீ 17 அல்ட்ரா எப்போது அறிமுகமாகும்? ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது அடுத்த வாரம் சீனாவில் அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சரியான வெளியீட்டு தேதி இன்னும் மறைக்கப்பட்ட நிலையில், இது டிசம்பர் 22 மற்றும் டிசம்பர் 27 க்கு இடையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாவ்மீ 17 அல்ட்ரா என்ன விலைக்கு வரும்? விலையை பொறுத்தவரை இந்தியாவிற்கு வரும் போது ரூ.1,19,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.73-இன்ச் WQHD+ LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- லைக்கா டியூன் செய்யப்பட்ட குவாட் ரியர் கேமரா யூனிட்
- 50-மெகாபிக்சல் ப்ரைமரி LYT-900 சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்)
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- OIS மற்றும் 3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி IMX858 டெலிஃபோட்டோ கேமரா
- OIS மற்றும் 4.3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 200-மெகாபிக்சல் ISOCELL HP9 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார்
- 90W வயர்டு மற்றும் 80W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5410mAh பேட்டரி


Click it and Unblock the Notifications








