Home
Mobile

ரூ.31500 Jio ஆபர் உடன் SALE ஆரம்பம்.. 200MP கேமரா, 6000mAh பேட்டரி, 90W சார்ஜிங் கொண்ட புது Xiaomi 5ஜி போன்!

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களாக இந்தியாவில் அறிமுகமான ஷாவ்மீ 17 சீரிஸ் மாடல்களின் விற்பனை தொடங்கி உள்ளது. இந்த சீரீஸின் கீழ் ஷாவ்மீ 17 (Xiaomi 17) மற்றும் ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) என்கிற 2 மாடல்கள் வாங்க கிடைக்கிறது. என்ன விலை? என்னென்ன ஆபர்கள்? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

ஷாவ்மீ 17, ஷாவ்மீ17 அல்ட்ரா விலை விவரங்கள்: ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,999 க்கும், 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.99,999 க்கும் வாங்க கிடைக்கிறது; இது பிளாக், ஐஸ் ப்ளூ மற்றும் வென்ச்சர் கிரீன் ஆகிய 3 கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.31500 Jio ஆபர் உடன் SALE ஆரம்பம்.. புது Xiaomi 5ஜி போன்!

மறுபுறம் உள்ள ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,39,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பிளாக் மற்றும் ஒயிட் கலர்களில் வாங்க கிடைக்கிறது. மேற்கண்ட 2 மாடல்களுமே அமேசான், ஷாவ்மீ இந்தியா இணையதளம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சியோமி ரீடெயில் ஸ்டார்கள் வழியாக வாங்க கிடைக்கின்றன.

ஷாவ்மீ 17, ஷாவ்மீ17 அல்ட்ரா விற்பனை சலுகைகள்: அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது ரூ.1,29,999 க்கு வாங்கலாம். இதில் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் ரூ.10,000 உடனடி தள்ளுபடி மற்றும் கிரெடிட் கார்டு இஎம்ஐ தள்ளுபடிகள் அடங்கும். இந்த ஸ்மார்ட்போனை மாதம் ரூ.14,444 முதல் தொடங்கும் ஒன்பது மாதங்களுக்கான நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பப்த்தின் கீழும் கூட வாங்கலாம்.

ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனின் மீது நெவர் ரன் அவுட் (Never Run Out) என்கிற சலுகை கிடைக்கிறது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் இலவச ஸ்டோரேஜ் அப்கிரேட்-ஐ (Free Storage Upgrade) பெறலாம். அதாவது, ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனின் 512ஜிபி மாடலை 256ஜிபி விலையில் வாங்கலாம்.

கூடுதலாக, 2 ஷாவ்மீ 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுமே பார்ட்னர் சலுகைகளுடன் (Partner Offers) வருகிறது. இதன் கீழ் ஸ்பாட்டிபை பிரீமியமிற்கு (Spotify Premium) நான்கு மாத சந்தா, யூட்யூப் ப்ரீமியமிற்கு (YouTube Premium) மூன்று மாத சந்தா, கூகுள் ஏஐ ப்ரோவிற்கு (Google AI Pro) மூன்று மாத சந்தா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கான ரூ.31,500 மதிப்புள்ள ஆபர்கள் கிடைக்கும்.

ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz வரை அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.3-இன்ச் CrystalRes OLED டிஸ்பிளே
- 3என்எம் ஸ்னாப்டிராகன்8 எலைட் ஜென் 5 சிப்செட்
- Summilux லென்ஸ்களுடன் கூடிய Leica-வால் ட்யூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 1/1.31-இன்ச் லைட் ஃப்யூஷன் 950 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா

- 60mm ஃபோகல் லென்த் மற்றும் OIS கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 102-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவுடன் கூடிய 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா
- 50-மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் செல்பீ கேமரா
- 30fps இல் 8K வீடியோ ரெக்கார்ட், 60fps இல் 4K ரெக்கார்ட் ஆதரவு
- 6330mAh பேட்டரி
- 100W வயர்டு ஹைப்பர்சார்ஜ் மற்றும் 50W வயர்லெஸ் ஹைப்பர்சார்ஜ் ஆதரவு
- IP68 ரேட்டிங்

ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.9-இன்ச் ஷாவ்மீ ஹைப்பர்ஆர்பிஜி (Xiaomi HyperRGB) ஓஎல்இடி டிஸ்பிளே
- குவால்காம் 3 என்எம் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- Leica ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்
- 50-மெகாபிக்சல் (f/1.67) ப்ரைமரி கேமரா (1-இன்ச் லைட் ஃப்யூஷன் 1050L சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் 23மிமீ போக்கால் லெங்த்)

- 1/1.4-இன்ச் சாம்சங் HPE சென்சார், OIS, f/2.39 முதல் f/2.96 அபெர்க்ஷர் மற்றும் 120x வரை டிஜிட்டல் ஜூம் திறன் கொண்ட 200-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 115-டிகிரி பீல்ட் ஆப் வியூ உடனான 1/2.75-இன்ச் சாம்சங் JN5 சென்சார் கொண்ட 50-மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ராவைடு கேமரா
- 50-மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா (1/2.87-இன்ச் OV50M சென்சார் மற்றும் 90-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ)
- 6000mAh பேட்டரி
- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 17 Ultra and Xiaomi 17 India Sale Started Check Out Offers From Jio Google and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X