தேதி குறிச்சாச்சு.. OLED டிஸ்பிளே.. 7500mAh பேட்டரி. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. புது Xiaomi சீரிஸ்.. எந்த மாடல்?
சியோமி நிறுவனத்தின் சியோமி 17 சீரிஸ் (Xiaomi 17 Series) மாடல்களின் வெளியீட்டு தேதியை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஐபோன் 17 சீரிஸ் மாடல்களுக்கு நிகரான டிசைன் மட்டுமல்லாமல், டூயல் டிஸ்பிளே கொண்ட மாடல்களாக இந்த சியோமி 17 சீரிஸ் இருக்கப் போகிறது. இதில் என்னென்ன மாடல்களை எதிர்பார்க்கலாம், பீச்சர்கள் எப்படி இருக்கும், பட்ஜெட் செக்மெண்ட் எவ்வளவு, உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி இந்த சியோமி 17 சீரிஸ் வெளியாக இருக்கிறது. இதில் சியோமி 17 (Xiaomi 17), சியோமி 17 ப்ரோ (Xiaomi 17 Pro) மற்றும் சியோமி 17 ப்ரோ மேக்ஸ் (Xiaomi 17 Pro Max) ஆகிய மாடல்கள் வெளியாக இருக்கின்றன. ஐபோன் 17 சீரிஸ் மாடல்களை போலவே இவற்றின் டிசைன் இருந்ததால், சியோமி 17 ஏர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சியோமி 17, 17 ப்ரோ மற்றும் 17 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் மட்டுமே வெளியாகும் என்பதை அந்த நிறுவனம் உறுதி செய்துவிட்டது. இந்த சியோமி 17 ஸ்மார்ட்போனில் மட்டும் மேஜிக் பேக் ஸ்கிரீன் (Magic Back Screen) என்னும் செகண்டரி டிஸ்பிளே கிடைக்கவில்லை. ஆனால், சியோமி 17 ப்ரோ மற்றும் சியோமி 17 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் செகண்டரி டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது.
அதேபோல ப்ரோ மாடல்களில் முதல்முறையாக ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 எஸ்ஓசி (Snapdragon 8 Elite Gen 5 SoC) கிடைக்க இருப்பதையும் சியோமி நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதேபோல ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பேட்டரி பீச்சர்களில் முந்தைய மாடல்களை தூக்கி சாப்பிடும் இருக்கிறது. ஏனென்றால், சியோமி 17 ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது.
அதேபோல 90W ஃபாஸ்ட் சார்ஜிங் பெற்று கொள்ளலாம். அதேபோல சியோமி 17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6300mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இதையெல்லாம், தட்டித்தூக்கும்படி சியோமி 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 7500mAh பேட்டரி கிடைக்கிறது. இதற்கு 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட இருக்கிறது. வயர்லெஸ் சார்ஜிங் எதிர்பார்க்கலாம்.
மேலும், லெய்கா கேமரா சிஸ்டம் (LEICA Camera System) இந்த சியோமி 17 சீரிஸ் மாடல்கள் கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோக சியோமி 17 மற்றும் சியோமி 17 ப்ரோ மாடல்களில் 6.3 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வர இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுடன் அல்ட்ரா-தின் பெசல்கள் (Ultra-thin Bezels) இருக்கும் என்று ஏற்கனவே சியோமி தெரிவித்திருந்தது.
சியோமி 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2K ரெசொலூஷன் வர இருக்கிறது. இந்த மூன்று மாடல்களிலும் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க இருக்கிறது. ஆனால், ப்ரோ மற்றும் மேக்ஸ் மாடல்களில் செகண்டரி டிஸ்பிளேவில் 2 கேமரா மற்றும் டிஸ்பிளேவுக்கு கீழ் தனியாக ஒரு கேமரா இடம்பெறுகிறது.
இதில் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட 50 எம்பி டிரிபிள் கேமரா எதிர்பார்க்கலாம். அதேபோல 50 எமபி ஆட்டோ போகஸ் (Auto Focus) செல்பீ கேமராவும் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. சிப்செட், கேமரா, பேட்டரி பீச்சர்கள் அதிகாரப்பூர்வமானவை.
மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்த பீச்சர்களாகும். இருப்பினும், செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாக இருப்பதால், ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக பீச்சர்கள் உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த மாடல்களின் விலையை பார்க்கையில், மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்தியாவில் சியோமி 15 மாடலின் ஆரம்ப விலை ரூ.64,999 பட்ஜெட்டில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








