பிப்.28 குறிச்சாச்சு.. 7000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OIS கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் சியோமி 17 சீரிஸ் (Xiaomi 17 Series) மாடல்கள் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. குளோபல் மார்கெட்டில் களமிறங்கும் அதே தேதியில் இந்தியாவிலும் வெளியாக இருக்கிறது. 7000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஐஎஸ் கேமரா உள்ளிட்ட பீச்சர்களுடன் வெளியாக இருக்கிறது.
சீன மார்கெட்டில் சியோமி 17 சீரிஸ் மாடல்கள் வெளியாகிவிட்டன. இதில் சியோமி 17 (Xiaomi 17) மற்றும் சியோமி 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) ஆகிய மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த மாடல்களே வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி குளோபல் மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. இந்திய மார்கெட்டில் அதே தேதியில் மாலை 6.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதையும் சியோமி இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதில் சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் டிசைன் மட்டுமே உறுதியாகி இருக்கிறது. மற்ற விவரங்கள் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், சியோமி 17 அல்ட்ரா மற்றும் சியோமி 17 ஆகிய 2 மாடல்களை எதிர்பார்க்கலாம்.
இந்த ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் ஏற்கனவே மார்கெட்டில் கசிந்துள்ளன. ஆகவே, சியோமி 17 ஸ்மார்ட்போனின் விலை ரூ.80,000 பட்ஜெட்டிலும், சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ரூ.1,25,000 பட்ஜெட்டிலும் வெளியாக வாய்ப்புள்ளது. ஆகவே, பிரீமியம் செக்மெண்ட்டில் இந்த சியோமி 17 சீரிஸ் இருக்கப்போவது தெரிகிறது.
சீன மார்கெட்டில் சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 2 வெர்ஷன்கள் கிடைத்தன. அதாவது, அல்ட்ரா பிரீமியம் கேமரா பீச்சர்களுடன் லெய்கா எடிஷன் கிடைத்தது. பிறகு ஸ்டான்டர்டு வெர்ஷன் கிடைத்தது. இந்தியாவில் எந்த எடிஷன் கிடைக்கும் என்பது கிளியராக தெரியவில்லை. இருப்பினும், கேமரா பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கும்.
சியோமி 17 அம்சங்கள் (Xiaomi 17 Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட்டை இந்த சியோமி 17 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு, சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 (Xiaomi HyperOS 3) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உள்ளது.
6.3 இன்ச் (2656 x 1220 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி லெய்கா அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி லெய்கா டெலிபோட்டோ கேமராவை கொடுத்துள்ளது. OIS டெக்னாலஜி மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது.
4K ரெக்கார்டிங் கொண்ட 50 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. 7000mAh பேட்டரி, 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 22.5W வயர்டு மேக்னடிக் சார்ஜிங் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் கொண்டிருக்கிறது. சீன மார்கெட்டில் ரூ.55,880 விலையில் அறிமுகமாகி உள்ளது. இந்தியாவில் கூடுதல் விலைக்கு கிடைக்க இருக்கிறது.
சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் + 50 எம்பி அல்ட்ரா வைடு + 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ + 50 எம்பி செல்பீ உள்ளது. 6800mAh பேட்டரி, 90W சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது.


Click it and Unblock the Notifications