பிப்.28 வரைக்கும் எந்த புது போனும் வாங்கிடாதீங்க.. Xiaomi இறக்கும் 2 சிங்கக்குட்டி!
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் ஒருவழியாக அதன் லேட்டஸ்ட் ஷாவ்மீ 17 சீரீஸ் (Xiaomi 17 Series) ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய அறிமுக தேதியை (Global Launch Date) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. எப்போது? என்னென்ன மாடல்கள் அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:
என்னென்ன மாடல்கள்? அறிவிக்கப்பட்டுள்ள தேதியில் - ஷாவ்மீ நிறுவனம் குறிப்பிட்ட சர்வதேச சந்தைகளில் ஷாவ்மீ 17 (Xiaomi 17) மற்றும் ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) ஆகிய 2 மாடல்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் இவ்விரு மாடல்களுமே ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்டன.

ஸ்டாண்டர்ட் ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போன் ஆனது கடந்த 2025 இல் ஷாவ்மீ 17 ப்ரோ (Xiaomi 17 Pro) மற்றும் ஷாவ்மீ 17 ப்ரோ மேக்ஸ் (Xiaomi 17 Pro) ஆகிய மாடல்களுடன் அறிமுகமானது. பின்னர் ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 2025 டிசம்பரில் வெளியிடப்பட்டது.
எப்போது அறிமுகம்? ஷாவ்மீ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மைக்ரோசைட் ஆனது ஷாவ்மீ 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்கிறது. எந்தெந்த மாடல்கள் அறிமுகமாகும் என்பதை ஷாவ்மீ நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும், டீஸர் படத்தில் ஷாவ்மீ 17 அல்ட்ரா மாடலை தெளிவாக பார்க்க முடிகிறது
என்ன விலைக்கு வரலாம்? ஷவமே நிறுவனம் இவ்விரு ஸ்மார்ட்போன்களின் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை அறிவிக்கவில்லை என்றாலும், ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.80,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.1,25,000 ஆக இருக்கலாம்.
ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- Android 16 ஓஎஸ் அடிப்படையிலான HyperOS 3 ஓஎஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 1060 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.9-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா கோர் 3nm ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- அட்ரெனோ 840 GPU
- 16GB வரை LPDDR5x அல்ட்ரா ரேம்
- 1TB UFS 4.1 ஆன்போர்டு ஸ்டோரேஜ்
- Leica-வால் டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 1-இன்ச் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் LOFIC Omnivision 1050L ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் Samsung JN5 அல்ட்ராவைடு கேமரா
- 3.2x முதல் 4.3x வரை தொடர்ச்சியான ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 200-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 8K ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 50-மெகாபிக்சல் OV50M செல்பீ கேமரா
- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,800mAh பேட்டரி
- 5G, 4G LTE, USB டைப்-சி போர்ட், NFC, Wi-Fi 7 மற்றும் ப்ளூடூத் 5.4
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- 3D அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 8.29 மிமீ
- எடையில் சுமார் 224 கிராம்


Click it and Unblock the Notifications