Home
Mobile

யோவ் சியோமி நீ வேற லெவல்.. 2 டிஸ்பிளே.. IP68 ரேட்டிங்.. 100W சார்ஜிங்.. புது 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி 17 ப்ரோ (Xiaomi 17 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய சியோமி 17 ப்ரோ போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சியோமி 17 ப்ரோ அம்சங்கள் (Xiaomi 17 Pro Specifications): 6.3-இன்ச் 1.5கே எம்10 12-பிட் ஒஎல்இடி (1.5K M10 12-bit OLED) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், 1920Hz PWM டிம்மிங், சியோமி Shield கிளாஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

யோவ் சியோமி நீ வேற லெவல்.. 2 டிஸ்பிளே.. IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?

அதேபோல் இந்த போனில் 2.7-இன்ச் சிறிய டிஸ்பிளே வசதியும் உள்ளது. இந்த சிறிய டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசி டிம்மிங் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் பின்புறம் இருக்கும் சிறிய டிஸ்பிளே விமான அறிவிப்புகள், ரயில் டிக்கெட், QR குறியீடுகள் மற்றும் எமோஜிகளை கூட பின் செய்ய அனுமதிக்கிறது. இரண்டு டிஸ்பிளே இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் உடன் இந்த சியோமி போன் வெளிவந்துள்ளது. பின்பு சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும் வகையில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய சியோமி போனில் உள்ளது.

HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சியோமி 17 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போன் குவால்காம் ஏஐ எஞ்சின், ஹைப்பர் ஏஐ டூல் ஆதரவுகளையும் கொண்டுள்ளது.

யோவ் சியோமி நீ வேற லெவல்.. 2 டிஸ்பிளே.. IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?

Leica கேமரா செட்டப் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது OIS ஆதரவு கொண்ட 50எம்பி லைட் ஃப்யூஷன் 950எல் சென்சார் + 50எம்பி Leica அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி Infinity Leica டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமராக்கள் மூலம் 8கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு கொண்டுள்ளன.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த புதிய சியோமி போனில் உள்ளது. குறிப்பாக இந்த செல்பி கேமரா 4கே வீடியோ ரெக்கார்டிங் செய்யும். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த சியோமி போனில் உள்ளன.

அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மாஸ் ((Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு கொண்டுள்ளது சியோமி 17 ப்ரோ போன். 5ஜி, டூயல் 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 5.4, குளோனாஸ் (GLONASS), ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சியோமி 17 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளன.

யோவ் சியோமி நீ வேற லெவல்.. 2 டிஸ்பிளே.. IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?

6300mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த சியோமி 17 ப்ரோ ஸ்மார்ட்போன். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னடிக் சார்ஜிங், 22.5W வயர்டு மற்றும் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. பிளாக், ஒயிட், பர்பிள், கிரீன் நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கிறது.

சியோமி 17 ப்ரோ விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட சியோமி 17 ப்ரோ மாடலின் விலை 4999 yuan (இந்திய மதிப்பில் ரூ.62,225)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட சியோமி 17 ப்ரோ மாடலின் விலை 5299 yuan (இந்திய மதிப்பில் ரூ.65,960)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட சியோமி 17 ப்ரோ மாடலின் விலை 5599 yuan (இந்திய மதிப்பில் ரூ.69,695)
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட சியோமி 17 ப்ரோ மாடலின் விலை 5999 yuan (இந்திய மதிப்பில் ரூ.74,675)

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 17 Pro with Snapdragon 8 Elite Gen 5 launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X