Home
Mobile

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? 50எம்பி கேமரா.. 7500mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. எந்த மாடல்?

சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி 17 ப்ரோ மேக்ஸ் (Xiaomi 17 Pro Max) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் 7500mAh பேட்டரி, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 100Wஃபாஸ்ட் சார்ஜிங், இரண்டு டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சியோமி போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சியோமி 17 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (Xiaomi 17 Pro Max Specifications): 6.9-இன்ச் 1.5கே எம்10 12-பிட் ஒஎல்இடி (1.5K M10 12-bit OLED) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2608 x 1200 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், 1920Hz PWM டிம்மிங், சியோமி Shield கிளாஸ் 3.0உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?  7500mAh பேட்டரி.. எந்த மாடல்?

குறிப்பாக இந்த போனில் 2.9-இன்ச் சிறிய டிஸ்பிளே வசதியும் உள்ளது. இந்த சிறிய டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசி டிம்மிங் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் பின்புறம் இருக்கும் சிறிய டிஸ்பிளே விமான அறிவிப்புகள், ரயில் டிக்கெட், QR குறியீடுகள் மற்றும் எமோஜிகளை கூட பின் செய்ய அனுமதிக்கிறது. இரண்டு டிஸ்பிளே இருப்பதால் பயன்படுத்த சுலபமாக இருக்கும்.

தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் உடன் சியோமி 17 ப்ரோ மேக்ஸ் போன் வெளிவந்துள்ளது. பின்பு சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும் வகையில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய சியோமி போனில் உள்ளது.

அதேபோல் HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய சியோமி 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போன் குவால்காம் ஏஐ எஞ்சின், ஹைப்பர் ஏஐ டூல் ஆதரவுகளையும் கொண்டுள்ளது.

அதுவும் Leica கேமரா செட்டப் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது OIS ஆதரவு கொண்ட 50எம்பி லைட் ஃப்யூஷன் 950எல் சென்சார் + 50எம்பி Leica அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி Infinity Leica டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமராக்கள் மூலம் 8கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு கொண்டுள்ளன.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த புதிய சியோமி போனில் உள்ளது. குறிப்பாக இந்த செல்பி கேமரா 4கே வீடியோ ரெக்கார்டிங் செய்யும். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த சியோமி போனில் உள்ளன.

இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன பின்பு இந்த போனின் எடை 210 கிராம் ஆகும்.

IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு கொண்டுள்ளது சியோமி 17 ப்ரோ மேக்ஸ் போன். 5ஜி, டூயல் 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 5.4, குளோனாஸ் (GLONASS), ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சியோமி 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன.

7500mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த சியோமி 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100Wவயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னடிக் சார்ஜிங், 22.5W வயர்டு மற்றும் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. பிளாக், ஒயிட், பர்பிள், கிரீன் நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கிறது.

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?  7500mAh பேட்டரி.. எந்த மாடல்?

சியோமி 17 ப்ரோ மேக்ஸ் விலை
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட சியோமி 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 5999 yuan (இந்திய மதிப்பில் ரூ.74,675)
1ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட சியோமி 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 6299 yuan (இந்திய மதிப்பில் ரூ.78,410)
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட சியோமி 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 6999 yuan (இந்திய மதிப்பில் ரூ.87,695)

ஆனால் இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். வரும் செப்டம்பர் 27 முதல் இந்த போன் சீனாவில் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 17 Pro Max with 7500mAh battery launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X