Home
Mobile

ஸ்மார்ட்போன் மார்கெட்டே மிரளுது.. 100W சார்ஜிங்.. LEICA கேமரா.. DUAL டிஸ்பிளே.. புது Xiaomi போன்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படியான டிஸ்பிளே பீச்சர்களுடன் சியோமி நிறுவனத்தின் சியோமி 17 ப்ரோ (Xiaomi 17 Pro) வெளியாக இருக்கிறது. இப்போது, டீசர் மூலம் மேஜிக் பேக் ஸ்கிரீன் (Magic Back Screen) என்னும் செகண்டரி டிஸ்பிளே கிடைக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 எஸ்ஓசி சிப்செட் கொண்ட மாடலாக வெளியாக இருக்கும் இந்த சியோமி 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் இந்த மாத இறுதியில் சியோமி 17 சீரிஸ் (Xiaomi 17 Series) மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இதில் சியோமி 17 (Xiaomi 17), சியோமி 17 ப்ரோ மற்றும் சியோமி 17 ப்ரோ மேக்ஸ் (Xiaomi 17 Pro Max) ஆகிய மாடல்கள் களமிறங்க இருக்கின்றன. ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் டூயல் டிஸ்பிளே கிடைக்கும் என்று தகவல்கள் கசிந்துவந்தன.

ஸ்மார்ட்போன் மார்கெட்டே மிரளுது.. 100W சார்ஜிங்.. LEICA கேமரா!

இப்போது, சியோமி நிறுவனமே டீசர் மூலம் அதை உறுதி செய்துள்ளது. இந்த செகண்டரி டிஸ்பிளே முந்தைய மாடல்களில் கிடைத்ததைவிட பெரிய ஸ்கிரீனாக இருக்கும் என்பது டீசர் மூலம் தெரிகிறது. இந்த செகண்டரி டிஸ்பிளேவுக்கு மேஜிக் பேக் ஸ்கிரீன் என்று சியோமி நிறுவனம் பெரியரிட்டுள்ளது. கிட்டத்தட்ட ஐபோன் 17 சீரிஸ் போல இந்த மாடல்களில் டிசைன் இருக்கிறது.

லெய்கா கேமரா சிஸ்டம் (LEICA Camera System) மற்றும் டெலிபோட்டோ கேமரா இடம்பெறுவது டீசர் மூலம் உறுதியாகி இருக்கிறது. டைட்டானியம் லுக்கில் கிரே கலரில் இருப்பதை பார்க்க முடிகிறது. ஏற்கனவே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 எஸ்ஓசி (Snapdragon 8 Elite Gen 5 SoC) சிப்செட் கொண்ட மாடல்களாக சியோமி 17 சீரிஸ் இருக்கும் என்று அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியது.

சொல்லப்போனால், இந்த சிப்செட் கொண்ட முதல் மாடல்களாக சியோமி 17 சீரிஸ் இருக்கப்போகிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன. மற்ற பீச்சர்கள் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், மார்கெட்டில் சில பீச்சர்கள் கசிந்துள்ளன. அதை இப்போது பார்க்கலாம். இது அதிகாரப்பூர்வமாவை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஸ்மார்ட்போன் மார்கெட்டே மிரளுது.. 100W சார்ஜிங்.. LEICA கேமரா!

சியோமி 17 ப்ரோ அம்சங்கள் (Xiaomi 17 Pro Specifications): டூயல் டிஸ்பிளே, லெய்கா கேமரா சிஸ்டம் மற்றும் டெலிபோட்டோ கேமரா கிடைப்பது உறுதியாகும். இதுபோக 6.3 இன்ச் எல்டிபிஓ (LPTO) டிஸ்பிளே கிடைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் கிடைக்கிறது.

100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6300mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்க இருக்கிறது. இந்த சியோமி 17 ப்ரோ ஸ்மார்ட்போனில் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்க இருக்கிறது.

அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த மாத இறுதியில் வெளியாக இருப்பதால், அடுத்தடுத்து பீச்சர்கள் வெளியாக வாய்ப்புள்ளது. முதலில் சீன மார்கெட்டில் வெளியாகும். அதன்பிறகு குளோபல் மற்றும் இந்தியா உள்பட மற்ற மார்கெட்களில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 17 Pro Getting A Secondary Screen Called Magic Back Screen Teased What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X