Home
Mobile

யாரு சாமி அவன்.. 200MP கேமரா.. 8000mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

சியோமி நிறுவனத்தின் அல்ட்ரா பிரீமியம் மாடலான சியோமி 17 மேக்ஸ் (Xiaomi 17 Max) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 200 எம்பி கேமரா, 8000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களில் மிரளவிட்டுள்ளது. இந்த சியோமி 17 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. லெய்கா சம்மிலக்ஸ் ஹை-ஸ்பீடு லென்ஸ் (Leica Summilux High-Speed ​​Lens) கொண்ட கேமரா சிஸ்டம் உள்ளது. பிரீமியம் கேமரா அவுட்புட் கொண்ட சியோமி மாடலாக இருக்கிறது. சியோமி ஹைப்பர் கோர் (Xiaomi HyperCore) என்ஜின் போன்ற பர்ஃபாமென்ஸ் என்ஹான்ஸ்மெண்ட் பீச்சர்களையும் கொடுக்கிறது.

யாரு சாமி அவன்.. 200MP கேமரா.. 8000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்!

சியோமி 17 மேக்ஸ் அம்சங்கள் (Xiaomi 17 Max Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த சியோமி 17 மேக்ஸ் ஸ்மார்ட்போன் இருக்கிறது. புது ஜெனரேஷன் அட்ரினோ ஜிபியு (Adreno GPU) மற்றும் குவால்காம் ஏஐ என்ஜின் (Qualcomm AI Engine) கொடுத்துள்ளது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஹைப்பர்ஓஎஸ் 3 (HyperOS 3) கொடுக்கப்பட்டு உள்ளது. 6.9 இன்ச் (1200 x 2608 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

எச்டிஆர்10பிளஸ் (HDR10+), எச்டிஆர் விவிட் (HDR Vivid) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கிடைக்கிறது. டிராகன் கிரிஸ்டல் 3.0 (Dragon Crystal 3.0) புரொடெக்சன் கொடுத்துள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்டுள்ளது. மேலும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப் வேரியண்ட்டும் கிடைக்கிறது.

எப்/1.65 அபெர்சர் கொண்ட 200 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. சம்சங் எச்பி9 (Samsung HP9), ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilisation) கிடைக்கிறது. மேலும், 23 எம்எம் போகல் லென்த் சப்போர்ட் கொடுக்கிறது. எப்/2.4 அபெர்சருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + எப்/2.4 அபெர்சருடன் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.

டெலிபோட்டோவில் 3X ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது. அல்ட்ரா வைடு கேமராவில் 102 டிகிரி பீல்டு வியூ கிடைக்கிறது. எப்/2.2 அபெர்சருடன் 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுத்துள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8000mAh பேட்டரியை இந்த சியோமி 17 மேக்ஸ் கொடுத்துள்ளது.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.67,874ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.72,117ஆகவும் இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.82,024ஆக இருக்கிறது. இது சீன மார்கெட் விலையாகும். பிக்சல் பிளாக் (Pixel Black), ஸ்கை ப்ளூ (Sky Blue) மற்றும் ஒயிட் (White) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் இந்த சியோமி 17 மேக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. 3டி அல்ட்ரா சோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. குளோபல் மார்கெட்டில் விரைவில் எதிர்பார்க்கலாம். இந்தியாவில் வெளியாகுமா என்பதை விரைவில் தெரிந்து கொள்ளலாம். பிரீமியம் கேமரா பிரியர்களுக்கு ஏற்ற மாடலாகும்.

Best Mobiles in India

English summary
Xiaomi 17 Max With 8000mAh Battery 200MP Camera 16GB RAM Launched in China Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X