Home
Mobile

8000mAh பேட்டரி, 100W வயர்டு, 50W வயர்லெஸ்.. முரட்டு காம்பினேஷன்ல புதிய Xiaomi போன்.. என்ன மாடல்?

ஒருபக்கம் ஒப்போ நிறுவனம் ஒரே சீரீஸின் கீழ் 5வது புதிய மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், ஷாவ்மீ நிறுவனமும் அதையே செய்ய உள்ளது போல் தெரிகிறது. ஷாவ்மீ நிறுவனம் அதன் ஷாவ்மீ 15 சீரிஸின் கீழ் ஐந்தாவது மாடலை கூடிய விரைவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அது ஷாவ்மீ 17 மேக்ஸ் (Xiaomi 17 Max) ஸ்மார்ட்போன் ஆகும். இது ஷாவ்மீ 17 (Xiaomi 17), ஷாவ்மீ 17 ப்ரோ (Xiaomi 17 Pro), ஷாவ்மீ 17 ப்ரோ மேக்ஸ் (Xiaomi 17 Pro Max) மற்றும் ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) உடன் இணைகிறது.

8000mAh பேட்டரி, 100W வயர்டு, 50W வயர்லெஸ்.. புதிய Xiaomi போன்!

ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் 'லீக்டு' அம்சங்கள்: டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த லேட்டஸ்ட் தகவல்களின்படி, ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பெரிய 8000mAh பேட்டரியை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 50W வயர்லெஸ் சார்ஜிங் உடன் 100W வயர்டு சார்ஜிங்கையும் ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது

இது உண்மையாகும் பட்சத்தில் இவ்வளவு பெரிய பேட்டரி கெப்பாசிட்டி + இவ்வளவு வேகமான சார்ஜிங் என்கிற காம்பினேஷனில் வெளியாகும் ஒரு சில ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். மேலும் இது நான்-ப்ரோ (Non-Pro) மாடல் என்பதால், இதில் செகண்டரி டிஸ்பிளே இடம்பெற வாய்ப்பில்லை. குறிப்பிடத்தக்க வகையில் ஷாவ்மீ 17 ப்ரோ மற்றும் ஷாவ்மீ 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய 2 மாடல்களுமே பேக் பேனலில் இரண்டாம் நிலை டிஸ்பிளேக்களை கொண்டுள்ளன.

கேமராக்களை பொறுத்தவரை, ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது, இது ஷாவ்மீ 17 அல்ட்ரா மாடலை தவிர்த்து, தற்போதுள்ள ஷாவ்மீ 17 சீரீஸ் மாடல்களை விட சிறந்த கேமரா செயல்திறனை வழங்கும் என்று கூறப்படுகிறது. இது ஷாவ்மீ 17 மாடலில் உள்ள ஆம்னிவிஷன் லைட் பியூஷன் 950 ப்ரைமரி கேமராவை "கடன் வாங்கும்" என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் செய்யப்படும்? ஷாவ்மீ 17 சீரீஸின் கீழ் வரும் இந்த புதிய மேக்ஸ் மாடல் ஆனது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை இந்த ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் வெளியிடப்படுமா என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை.

முன்னதாக அறிமுகமான ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- Android 16 ஓஎஸ் அடிப்படையிலான HyperOS 3 ஓஎஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 1060 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.9-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா கோர் 3nm ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- அட்ரெனோ 840 GPU
- 16GB வரை LPDDR5x அல்ட்ரா ரேம்
- 1TB UFS 4.1 ஆன்போர்டு ஸ்டோரேஜ்

- Leica-வால் டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 1-இன்ச் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் LOFIC Omnivision 1050L ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் Samsung JN5 அல்ட்ராவைடு கேமரா
- 3.2x முதல் 4.3x வரை தொடர்ச்சியான ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 200-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 8K ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 50-மெகாபிக்சல் OV50M செல்பீ கேமரா

- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,800mAh பேட்டரி
- 5G, 4G LTE, USB டைப்-சி போர்ட், NFC, Wi-Fi 7 மற்றும் ப்ளூடூத் 5.4
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- 3D அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 8.29 மிமீ
- எடையில் சுமார் 224 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 17 Max With 8000mAh battery 100W wired 50W wireless charging Launching April 2026 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X