போட்டான் பாரு Xiaomi.. புது Max மாடல்.. 7500mAh பேட்டரி, 100W சார்ஜிங், Snapdragon 8 Elite Gen 5 சிப்செட்!
ஷாவ்மீ, ஒரு புதிய ஷாவ்மீ 17 சீரிஸ் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக ஒரு சமீபத்திய தகவல் வெளிப்படுத்தியுள்ளது. ஷாவ்மீ 17 (Xiaomi 17), ஷாவ்மீ 17 ப்ரோ (Xiaomi 17 Pro), ஷாவ்மீ 17 ப்ரோ மேக்ஸ் (Xiaomi 17 Pro Max) மற்றும் ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) மாடலுக்கு பிறகு, இந்த சீரீஸின் கீழ் ஐந்தாவது மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்கிற தகவலே அது!
அது ஷாவ்மீ 17 மேக்ஸ் (Xiaomi 17 Max) ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில், பேக் பேனில் செகண்டரி டிஸ்பிளே இடம்பெறாது என்பது போல் தெரிகிறது. இது ஷாவ்மீ 17 மேக்ஸ் மற்றும் ஷாவ்மீ 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய 2 மாடல்களுக்கான முக்கிய வேறுபாடாக இருக்கலாம்.

ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போன் - எப்போது அறிமும்? என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 2026 மார்ச் அல்லது ஏப்ரலில் அறிமுகம் செய்யப்படலாம்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.8-இன்ச் அல்லது 6.9-இன்ச் OLED 2K டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட்
- 50-மெகாபிக்சல் ஆம்னிவிஷன் லைட் பியூஷன் 950L ப்ரைமரி கேமரா,
- 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
- 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 50-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 100W வயர்டு, 50W வயர்லெஸ் மற்றும் 22.5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- 7500mAh பேட்டரி
முன்னதாக அறிமுகமான ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர் ஓஎஸ் 3 ஓஎஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 1060 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.9-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா கோர் 3nm ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- அட்ரெனோ 840 GPU
- 16GB வரை LPDDR5x அல்ட்ரா ரேம்
- 1TB UFS 4.1 ஆன்போர்டு ஸ்டோரேஜ்
- Leica-வால் டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 1-இன்ச் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் LOFIC Omnivision 1050L ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் Samsung JN5 அல்ட்ராவைடு கேமரா
- 3.2x முதல் 4.3x வரை தொடர்ச்சியான ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 200-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 8K ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 50-மெகாபிக்சல் OV50M செல்பீ கேமரா
- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,800mAh பேட்டரி
- 5G, 4G LTE, USB டைப்-சி போர்ட், NFC, Wi-Fi 7 மற்றும் ப்ளூடூத் 5.4
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- 3D அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 8.29 மிமீ
- எடையில் சுமார் 224 கிராம்
ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை: 12 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பேஸிக் ஆப்ஷன் ஆனது இந்திய ரூபாய் மதினின்படி தோராயமாக ரூ.90,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதே ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.96,000 க்கும், கடைசியாக உள்ள ஹை எண்ட் 16 ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,09,000 க்கும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications








