Xiaomi-யின் புது சிங்கக்குட்டி.. 200MP சாம்சங் கேமரா, 8000mAh பேட்டரி, 100W சார்ஜிங்.. என்ன மாடல்?
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் அதன் அடுத்த ஷாவ்மீ 17 சீரீஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அது ஷாவ்மீ 17 மேக்ஸ் (Xiaomi 17 Max) ஸ்மார்ட்போன் ஆகும். முன்னதாக வெளியான தகவல் - இது 8000mAh பேட்டரி மற்றும் ஷாவ்மீ 17 மாடலை போன்ற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய லீக் ஆனது, ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது இன்னும் திறமையான கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று கூறுகிறது. டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் சமீபத்திய கூற்றுப்படி, ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 1/1.4 இன்ச் அளவுள்ள 200எம்பி சாம்சங் ISOCELL HPE ப்ரைமரி சென்சாரை கொண்டிருக்கும்.

மேலும் இது 1/1.953 இன்ச் 50எம்பி சோனி IMX8-சீரிஸ் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சாருடன் இணைக்கப்பட்டு இருக்கும். கூடவே இதன் கேமரா செட்டப்பில் 50எம்பி அல்ட்ராவைடு லென்ஸும் இடம்பெறலாம். ஒப்பிடுகையில் "வெண்ணிலா" ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனின் ப்ரைமரி, டெலிஃபோட்டோ மற்றும் அல்ட்ராவைடு கேமராக்களில் 50எம்பி சென்சார்கள் உள்ளது.
இமேஜிங்கிற்காக, இந்த ஸ்மார்ட்போனிலும் - ஷாவ்மீ நிறுவனம் ஆனது லைக்கா (Leica) உடனான கூட்டாண்மையை தொடரும் என்றும் வெளியான லீக் கூறுகிறது. இது தவிர, குறிப்பிட்ட டிப்ஸ்டர் ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் மற்ற ஹார்ட்வேர் அம்சங்கள் குறித்து எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை.
இருப்பினும், முந்தைய அறிக்கையின்படி, ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் அளவிலான டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட், 8000mAh பேட்டரி, 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாவ்மீ 17 மேக்ஸ் ஆனது ஒரு நான்-ப்ரோ மாடல் என்பதால், இதில் இரண்டாம் நிலை ரியர் டிஸ்பிளே இடம்பெற வாய்ப்பில்லை. ஆக தற்போதைக்கு செக்கென்டரி டிஸ்பிளேவானது ஷாவ்மீ 17 ப்ரோ (Xiaomi 17 Pro) மற்றும் ஷாவ்மீ 17 ப்ரோ மேக்ஸ் (Xiaomi 17 Pro Max) மாடல்களில் கிடைக்கிறது. ஆனால் புதிய மேக்ஸ் மாடலின் ரியர் டிசைன் ஆனது ஸ்டாண்டர்ட் ஷாவ்மீ 17 மாடலை போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
எப்போது அறிமுகம் செய்யப்படும்? இந்த ஸ்மார்ட்போன் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இது உலகளாவிய சந்தைக்கு வருமா வராதா என்கிற கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை. ஏனெனில் ஷாவ்மீ நிறுவனம் ஆனது "இப்போதைக்கு" சர்வதேச அளவில் ஷாவ்மீ 17 மற்றும் ஷாவ்மீ 17 அல்ட்ரா ஆகிய மாடல்களை மட்டுமே கொண்டுவரலாம்.
முன்னதாக அறிமுகமான ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- Android 16 ஓஎஸ் அடிப்படையிலான HyperOS 3 ஓஎஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 1060 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.9-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா கோர் 3nm ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- அட்ரெனோ 840 GPU
- 16GB வரை LPDDR5x அல்ட்ரா ரேம்
- 1TB UFS 4.1 ஆன்போர்டு ஸ்டோரேஜ்
- Leica-வால் டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 1-இன்ச் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் LOFIC Omnivision 1050L ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் Samsung JN5 அல்ட்ராவைடு கேமரா
- 3.2x முதல் 4.3x வரை தொடர்ச்சியான ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 200-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 8K ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 50-மெகாபிக்சல் OV50M செல்பீ கேமரா
- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,800mAh பேட்டரி
- 5G, 4G LTE, USB டைப்-சி போர்ட், NFC, Wi-Fi 7 மற்றும் ப்ளூடூத் 5.4
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- 3D அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 8.29 மிமீ
- எடையில் சுமார் 224 கிராம்


Click it and Unblock the Notifications








