Home
Mobile

ப்பா என்னா காம்பினேஷன் டா இது.. 200MP கேமரா, 8000mAh பேட்டரி, 6.9-இன்ச் டிஸ்பிளே.. Xiaomi-யின் புது MAX போன்!

சீன நிறுவனம் ஆன ஷாவ்மீ, வெயிட்டு சிப்செட், முரட்டு பேட்டரி, பெரிய டிஸ்பிளே என கிட்டத்தட்ட எல்லா முக்கிய அம்சங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு "மேக்ஸ்" ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. அது எந்த மாடல்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? எப்போது அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:

எந்த மாடல்? நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (DCS) வழியாக கிடைத்துள்ள விவரங்களின்படி, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப் மூலம் இயங்கும் ஒரு புதிய ஷாவ்மீ ஸ்மார்ட்போன் ஆனது பெரிய டிஸ்பிளே மற்றும் பெரிய பேட்டரியுடன் அறிமுகத்திற்கி தயாராகி வருகிறது. அவர் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் மாடல் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், அது ஷாவ்மீ 17 மேக்ஸ் (Xiaomi 17 Max) ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

200MP கேமரா, 8000mAh பேட்டரி.. Xiaomi-யின் புது MAX போன்!

என்னென்ன அம்சங்கள்? மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டரின் கூற்றுப்படி, ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட ஸ்பீக்கர்களை கொண்டிருக்கும். இது மேம்பட்ட ஆடியோ செயல்திறனுக்காக டூயல் சிம்மட்ரிக் 1115 ஸ்பீக்கர் சிஸ்டமை பயன்படுத்தலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் எக்ஸ்-ஆக்சிஸ் நேரியல் மோட்டாரையும் தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாவ்மீ 17 சீரீஸில் இது ஒரு நிலையான அம்சமாகும்

பேட்டரியை பொறுத்தவரை இது ஒரு பெரிய 8,000mAh-கிளாஸ் பேட்டரியை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மிகப்பெரிய பேட்டரி 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை, ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 1.5K ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.9-இன்ச் பிளாட் OLED பேனலை கொண்டிருக்கலாம்.

கேமராக்களை பொறுத்தவரை ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா அமைப்பில் 200-மெகாபிக்சல் சாம்சங் ISOCELL HPE ப்ரைமரி கேமரா, 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் சோனி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவைகள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. செல்பீக்களுக்கு, இது 50-மெகாபிக்சல் கேமராவை பேக் செய்யலாம்.

மேலும் லேட்டஸ்ட் ஷாவ்மீ ஸ்மார்ட்போன்களை போலவே, 1ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போனும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 3 உடன் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த டிசைன் லேங்குவேஜ் ஆனது ஒரு க்ளீன் ஆன மற்றும் குறைந்தபட்ச ஆஸ்தெட்டிகை பின்பற்றலாம்.

எப்போது அறிமுகம்? ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போனை சுற்றியுள்ள வதந்திகள் இது 2026 ஏப்ரல் மாதத்தில் சீனாவில் அறிமுகமாகலாம் என்று கூறுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் 2026 மார்ச் மாத தொடக்கத்தில் சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் விவோ எக்ஸ்300 மேக்ஸ் (Vivo X300 Max) உடன் போட்டியிட வாய்ப்புள்ளது.

முன்னதாக அறிமுகமானஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.9-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா கோர் 3nm ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 16GB வரை LPDDR5x அல்ட்ரா ரேம்
- 1TB UFS 4.1 ஆன்போர்டு ஸ்டோரேஜ்
- லைக்காவால் டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்

- 1-இன்ச் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் LOFIC Omnivision 1050L ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் Samsung JN5 அல்ட்ராவைடு கேமரா
- 3.2x முதல் 4.3x வரை தொடர்ச்சியான ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 200-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 8K ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 50-மெகாபிக்சல் OV50M செல்பீ கேமரா
- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,800mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 17 Max new leak Snapdragon 8 Elite Gen 5 chip 200MP camera 8000mAh Battery
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X