சிதற விட்டான் Xiaomi.. 100W சார்ஜிங், 8000mAh பேட்டரி, 200MP கேமரா உடன் புது 5ஜி போன்.. எந்த மாடல்?
100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 8000mAh பேட்டரி, 200-மெகாபிக்சல் சாம்சங் ஐசோசெல் எச்பி-சீரிஸ் ப்ரைமரி கேமரா உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களுடன்.. ஒரு தரமான, புதிய ஷாவ்மீ ஸ்மார்ட்போன், இம்மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது ஷாவ்மீ 17 மேக்ஸ் (Xiaomi 17 Max) மாடலாகும்.
சீன அறிமுகத்தை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகம் ஆகுமா? இப்போதைக்கு இது இந்திய சந்தைக்கும் வருமா என்பதை உறுதியாக கூற முடியாது. ஏனென்றால் ஷாவ்மீ 17 சீரீஸின் கீழ் அறிமுகமான 2 ப்ரோ மாடல்களுமே இந்திய சந்தைக்கு வரவில்லை. ஆனால் ஷாவ்மீ 17 மற்றும் ஷாவ்மீ 17 அல்ட்ரா ஆகிய இரண்டும் கடந்த மார்ச் 2026-ல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

அறியாதோர்களுக்கு மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே, ஷாவ்மீ 17 மேக்ஸ் ஆனது - ஷாவ்மீ 17, ஷாவ்மீ 17 ப்ரோ, ஷாவ்மீ 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஹை-எண்ட் ஷாவ்மீ 17 அல்ட்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய ஷாவ்மீ 17 பிளாக்ஷிப் சீரீஸில் உள்ள மற்ற மாடல்களுடன் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன? ஷாவ்மீ பகிர்ந்து உள்ள அதிகாரப்பூர்வ டீசர்கள் வழியாக, சியோமி 17 மேக்ஸ் ஆனது ஒப்பீட்டளவில் மெல்லிய பெசல்களுடன் கூடிய ஒரு பெரிய 6.9-இன்ச் பிளாட் ஆன டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்துகின்றன.
ஷாவ்மீ 17 அல்ட்ராவின் பெரிய, வட்ட வடிவ கேமரா அமைப்பைப் போலல்லாமல், இது ஒரு வட்டமான செவ்வக கேமரா மாட்யூலுடன் காட்டப்பட்டுள்ளது. மேலும் டீசர் படங்கள் மூலம், ஷாவ்மீ 17 மேக்ஸ் ஆனது பிளாக், ப்ளூ மற்றும் ஒயிட் கலர்களில் வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது
ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 1.5கே LTPO டிஸ்பிளே
- சிம்மெட்ரிக்கல் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- LPDDR5x ரேம் மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ்
- 200-மெகாபிக்சல் சாம்சங் ISOCELL HP-சீரிஸ் ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
- 3x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் கூடிய 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார்
- 8000mAh பேட்டரி (இது உண்மையாக இருந்தால், இதுவரையிலான ஷாவ்மீ ஸ்மார்ட்போன்களிலேயே இதுதான் மிகப்பெரிய பேட்டரியாக இருக்கும்)
- 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் PPS இணக்கத்தன்மையுடன் கூடிய 50W வயர்லெஸ் சார்ஜிங்
முன்னதாக அறிமுகமான ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட், டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடனான 6.9-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- லைக்காவால் டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 1-இன்ச் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் LOFIC ஆம்னிவிஷன் 1050L ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் சாம்சங் JN5 அல்ட்ராவைடு கேமரா
- 3.2x முதல் 4.3x வரை ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 200-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 50-மெகாபிக்சல் OV50M செல்பீ கேமரா
- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,800mAh பேட்டரி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்


Click it and Unblock the Notifications