முரட்டு காம்பினேஷனில் வெயிட்டு Xiaomi போன்.. 5ஜி, 8000mAh பேட்டரி, 100W சார்ஜிங், 200MP கேமரா.. எந்த மாடல்?
தரமான ப்ரீமியம் / பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை (Premium / Flagship ) வாங்க வேண்டும் என்கிற திட்டத்தில் உள்ளவர்கள், இந்த மே 2026 இல் அதிக கவனம் செலுத்த வேண்டியது. ஷாவ்மீ நிறுவனத்தின் ஷாவ்மீ 17 மேக்ஸ் (Xiaomi 17 Max) ஸ்மார்ட்போனின் மீது தான்.
இந்த மாத இறுதியில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள சியோமி 17 மேக்ஸ், இந்திய சந்தைக்கும் வர அதிக வாய்ப்புள்ளதாக இப்போதே பேசப்படுகிறது. ஏற்கனவே ஷாவ்மீ 17மற்றும் ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி விட்டதால், மேக்ஸ் மாடலின் அறிமுகம் கிட்டத்தட்ட உறுதி என்றே கூறலாம்.

ஷாவ்மீ 17 மேக்ஸ் குறித்து தொடர்ந்து வெளிவரும் அதிகாரப்பூர்வ டீசர்கள், இந்த ஸ்மார்ட்போனில் என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்த தெளிவான யோசனையை நமக்கு தந்துள்ளன. ஸ்டாண்டர்ட் ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனின் லார்ஜர் வெர்ஷனை வெளியிடுவதற்கு பதிலாக, இந்நிறுவனம் பேட்டரி லைஃப், டிஸ்பிளே, பெர்பார்மென்ஸ் மற்றும் கேமரா ஹார்ட்வேர் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது. இதோ அதுகுறித்த விவரங்கள்:
8000mAh பேட்டரி பேட்டரி: ஒரு ஸ்மார்ட்போனில் 8,000mAh பேட்டரியை பொருத்துவது அதன் எடை மற்றும் தடிமன் குறித்த கேள்விகளை இயல்பாகவே எழுப்புகிறது. இதை சமாளிக்க, ஷாவ்மீ தனது புதிய சிலிக்கான்-கார்பன் பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது, இது சிறிய அளவில் அதிக ஆற்றல் அடர்த்தியை வழங்குகிறது. சார்ஜ் செய்வதை பொறுத்தவரை, இது 100W வயர்டு சார்ஜிங் மற்றும் PPS இணக்கத்தன்மையுடன் கூடிய 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. 6.9-இன்ச் டிஸ்பிளே மற்றும் ஸ்லிம் டிசைன்: இந்த ஸ்மார்ட்போன், முந்தைய ஷாவ்மீ 15 சீரிஸிலிருந்து டிசைன் தொடர்பான உத்வேகத்தை பெற்று, ஆனால் ஸ்லிம் ஆன பெசல்களுடன் கூடிய 6.9-இன்ச் பிளாட் ஆன டிஸ்பிளேவை கொண்டிருக்கும். சியோமி இதை சூப்பர் பிக்சல் டிஸ்பிளே என்று அழைக்கிறது, இது ஒரு புதிய ஆர்ஜிபி சப்-பிக்சல் லே-அவுட் மற்றும் ரெட் லுமினஸ் மெட்டீரியல்ஸ் பொருட்களை கொண்டுள்ளது.
ஷாவ்மீ நிறுவனத்தின் கூற்றுப்படி, மேற்கண்ட காம்பினேஷன் ஆனது ஒரு 2கே டிஸ்பிளேவின் தெளிவை வழங்குகிறது, ஆனால் ஒரு வழக்கமான 1.5K OLED பேனலை விட குறைவான ஆற்றலை பயன்படுத்துகிறது. மேலும் இதில் 120ஹெர்ட்ஸ் LTPO ரெஃப்ரெஷ் ரேட், அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் சிமெட்ரிக்கல் டூயல் ஸ்பீக்கர்கள் ஆகிய அம்சங்களையும் எதிர்பார்க்கலாம்
3. 200எம்பி கேமரா: ரியர் பேனலில், ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போனானது ஒரு வட்டமான சதுர வடிவ கேமரா மாட்யூலை பெற்றுள்ளது. அதில் 1/1.4-இன்ச் சென்சார் கொண்ட, லைக்கா ஆதரவுடைய 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை பயன்படுத்தும் தனது பிராண்டின் முதல் போன் இதுவாக இருக்கும் என்று ஷாவ்மீ உறுதிப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் முறையில் ஜூம் செய்யும்போது விவரங்களை தக்கவைக்க உதவும் வகையில் இந்த ஹை ரெசல்யூஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்மை சென்சார் உடன், இந்த ஸ்மார்ட்போனில் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் வைட் ஆங்கிள் ஷாட்களுக்கான 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா ஆகியவைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்: ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போனானது குவால்காமின் உயர்தர ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படும். இது LPDDR5X ரேம் மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜுடன் இணைக்கப்படும். ஷாவ்மீ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்காக, முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்ட உள் அமைப்பையும் வெளியிட்டுள்ளது. இது அதிக நேரம், ஒரே நேரத்தில் பல பணிகளைச செய்யும்போதும், நீண்ட நேரம் கேம் விளையாடும்போதும் வெப்ப மேலாண்மையை வெகுவாக மேம்படுத்தும்.
5. ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? சியோமி 17 மேக்ஸ் தற்போது சீனாவில் முன்பதிவுக்குக் கிடைக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ வெளியீடு மே 21 அன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் உலகளாவிய அறிமுகத்தை ஷாவ்மீ இன்னும் உறுதி செய்யவில்லை என்றாலும், ஷாவ்மீ 17டி மற்றும் 17டி ப்ரோ மாடல்களை மே 28 அன்று உலகளவில் வெளியிடுகிறது; இதை தொடர்ந்த்து ஷாவ்மீ மேக்ஸ் 17 மாடலும் உலகளவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications