Home
Mobile

அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புது Xiaomi போன்.. எந்த மாடல்?

சியோமி நிறுவனத்தின் புதிய சியோமி 17 மற்றும் சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் வரும் பிப்ரவரி 28-ம் தேதி உலக சந்தையில் அறிமுகமாகும் என்று தற்போது தகவல் கசிந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் உலக சந்தையில் அறிமுகமான சில வாரங்களில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான சியோமி 17 போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

சியோமி 17 அம்சங்கள் (Xiaomi 17 Specifications): இந்த சியோமி போன் 6.3-இன்ச் 1.5கே எம்10 12-பிட் ஒஎல்இடி (1.5K M10 12-bit OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன், 1920Hz PWM டிம்மிங், டிசி டிம்மிங், சியோமி டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் (Xiaomi Dragon Crystal Glass) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க.. வருகிறது புது Xiaomi போன்..

தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் வசதி இந்த போனில் இடம்பெற்றுள்ளது. பின்பு சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும் வகையில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய சியோமி போனில் உள்ளது.

குறிப்பாக HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளம் மூலம் இந்த புதிய சியோமி 17 ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போன் குவால்காம் AI எஞ்சின், ஹைப்பர் AI டூல் ஆதரவுகளையும் கொண்டுள்ளது.

அதேபோல் இந்த சியோமி போன் Leica கேமரா செட்டப் கொண்டுள்ளது. அதன்படி OIS ஆதரவு கொண்ட 50எம்பி லைட் ஃப்யூஷன் 950 சென்சார் + 50எம்பி Leica அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி Infinity Leica டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த கேமராக்கள் 8கே வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த புதிய சியோமி போனில் உள்ளது. குறிப்பாக இந்த செல்பி கேமரா 4கே வீடியோ ரெக்கார்டிங் செய்யும். இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த சியோமி போனில் உள்ளன.

அதுவும் அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

இந்த சியோமி 17 ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னடிக் சார்ஜிங், 22.5W வயர்டு மற்றும் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.

5ஜி, டூயல் 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 5.4, குளோனாஸ் (GLONASS), ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சியோமி ஸ்மார்ட்போனில் உள்ளன. IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு கொண்டுள்ளது சியோமி 17 போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 17 Global launch date leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X