இருங்க பாய்.. Snapdragon 8 Elite 2, 100W சார்ஜிங், 6800mAh பேட்டரி உடன் Xiaomi-யின் மினி போன்.. என்ன மாடல்?
ஒன்பிளஸ் (ஜூன் 5 அறிமுகமாக உள்ள ஒன்பிளஸ் 13எஸ்) மற்றும் விவோ (மே 29 அறிமுகமாக உள்ள விவோ எஸ்30 ப்ரோ மினி) ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து ஷாவ்மீ நிறுவனமும் ஒரு புதிய மினி ஸ்மார்ட்போனை அதாவது ஒரு காம்பாக்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. என்ன மாடல்? எப்போது அறிமுகம்? என்னென்ன அம்சங்கள்?
நாம் இங்கே பேசுவது ஷாவ்மீ 16 (Xiaomi 16) மாடலை பற்றித்தான். டிசைனை பொறுத்தவரை இது ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனில் நாம் பார்த்த அதே ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் டிசைனை கொண்டுள்ளது. ஆனால் ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனில் காணப்படும் போலியான நான்காவது லென்ஸ் அகற்றப்பட்டுள்ளது. மேலும் லைகா (Leica) பிராண்டிங் ஆனது கேமரா யூனிட்டின் கீழ்-வலதுபுறத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. எல்இடி ஃபிளாஷ் ஆனது ரியர் கேமரா செட்டப்பின் வலது பக்கத்தில் உள்ளது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் (Qualcomm) நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 (Snapdragon 8 Elite 2) சிப் மூலம் இயக்கப்படும் முதல் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது நான்கு பக்கங்களிலும் மிக மெல்லிய பெசல்களுடன் 6.3-இன்ச் பிளாட் OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை இது பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸுடன் 50எம்பி ட்ரிபிள் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். மேலும் இது ஷாவ்மீ நிறுவனத்தின் வரவிருக்கும் HyperOS 3.0 உடனான ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் இயக்கப்படலாம். பேட்டரியை பொறுத்தவரை இது 100W சார்ஜிங் கொண்ட 6,800mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.
நினைவூட்டும் வண்ணம் ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனில் 90W சார்ஜிங் கொண்ட 5,400mAh பேட்டரி தான் இருந்தது. ஆக ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போன் ஆனது அதன் பிரிவில் உள்ள மற்ற மாடல்களை விட பெரிய பேட்டரியை பேக் செய்ய உள்ளது. ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது 80W சார்ஜிங்குடன் 6,260mAh பேட்டரியை கொண்டுள்ளது, அதே நேரத்தில் விவோ எக்ஸ்200 எப்இ ஆனது 90W சார்ஜிங்குடன் 6,500mAh பேட்டரியை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய பேட்டரி இருக்கும் போதிலும், ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்லிம் ஆன மற்றும் லைட் வெயிட் ஆன கட்டமைப்பை தக்கவைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போன் ஆனது 2025 செப்டம்பர் மாத இறுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாவ்மீ 16 சீரீஸின் ஹை எண்ட் மாடல் ஆன ஷாவ்மீ 16 அல்ட்ரா (Xiaomi 16 Ultra) ஸ்மார்ட்போன் ஆனது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனியாக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இன்று (மே 22 ஆம் தேதி) சீனாவில் நடக்கும் ஒரு பெரிய வெளியீட்டு நிகழ்வில், ஷாவ்மீ நிறுவனம் அதன் முதல் எஸ்யுவி ஆன ஷாவ்மீ யு7 (Xiaomi YU7), ஷாவ்மீ 15எஸ் ப்ரோ (Xiaomi 15S Pro), ஷாவ்மீ பேட் 7 அல்ட்ரா (Xiaomi Pad 7 Ultra) உட்பட பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது. ஷாவ்மீ 15எஸ் ப்ரோ மற்றும் ஷாவ்மீ பேட் 7 அல்ட்ரா ஆகிய இரண்டுமே 3என்எம் செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்ட, ஷாவ்மீ நிறுவனத்தால் சுயமாக உருவாக்கப்பட்ட இன்-ஹவுஸ் ஸ்ரிங் ஓ1 சிப்செட் உடன் வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஷாவ்மீ 15எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது LTPO 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் ரீடர் உடனான 6.73-இன்ச் 2கே குவாட்-கர்வ்டு ஸ்க்ரீனை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6100mAh பேட்டரியை கொண்டிருக்கலாம் மற்றும் 90W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கலாம். கேமராக்களை பொறுத்தவரை இது 50 மெகாபிக்சல் சென்சார்கள் மற்றும் 10எக்ஸ் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்ட லைக்கா-பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








