தலைவன் இறங்கட்டுமே.. 7000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. LTPO டிஸ்பிளே.. ஓம்னிவிஷன் கேமரா.. எந்த மாடல்?
சியோமி பிரியர்களிடையே அதிக எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட சியோமி 16 (Xiaomi 16) ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. 7000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பேட்டரி சிஸ்டம் மட்டுமல்லாமல், ஓம்னிவிஷன் சென்சார் கேமரா, எல்டிபிஓ டிஸ்பிளே போன்ற பீச்சர்களும் அதில் இருக்கின்றன. இந்த சியோமி 16 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சியோமி 16 சீரிஸ் (Xiaomi 16 Series) மாடல்கள் இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சியோமி 16, சியோமி 16 ப்ரோ (Xiaomi 16 Pro), சியோமி 16 ப்ரோ மினி (Xiaomi 16 Pro Mini) மற்றும் சியோமி 16 அல்ட்ரா (Xiaomi 16 Ultra) ஆகிய மாடல்கள் வெளியாக இருப்பதாக தெரிகிறது. இதற்கு ஏற்ப அந்த ஸ்மார்ட்போன்களின் பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துவருகின்றன.

இப்போது, சியோமி 16 ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்களும் கசிந்துள்ளன. டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் (Yogesh Brar) மூலம் இந்த பீச்சர்கள் கசிந்துள்ளன. இந்த பீச்சர்களை பார்த்தால், அல்ட்ரா பிரீமியம் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்கள் விரும்பும்படி பேட்டரி கிடைக்க இருப்பது தெரிகிறது. டிஸ்பிளே பீச்சரில் இருந்து ஆரம்பிக்கலாம்.
சியோமி 16 அம்சங்கள் (Xiaomi 16 Specifications): பிரீமியம் மாடல்களுக்கு நிகரான அவுட்புட் கொடுக்கும்படி 6.3 இன்ச் எல்டிபிஓ (LTPO) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவிஸ் 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. கேமிங் பீச்சர்களுடன் ஹைப்பர்ஓஎஸ் 3 (HyperOS 3) கிடைக்க இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) எதிர்பார்க்கலாம். ஏனென்றால், இப்போது களமிறங்கும் பிரீமியம் மாடல்களில் இந்த ஓஎஸ் அப்கிரேட் செய்யப்படுகின்றன. இந்த சியோமி 16 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 (Snapdragon 8 Elite 2) கிடைக்க இருக்கிறது. அதேபோல ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) கிடைக்கிறது.
கேமராவில் முந்தைய மாடல்களை போலவே டிரிபிள் ரியர் சிஸ்டம் எதிர்பார்க்க முடிகிறது. ஏனென்றால், 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது. மெயின் கேமராவில் ஓம்னிவிஷன் (Omnivision) சென்சார் மற்றும் டெலிபோட்டோவில் சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சார் வர இருக்கிறது.
இந்த சியோமி 16 ஸ்மார்ட்போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. பேட்டரி சிஸ்டம் கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும்படி இருக்கிறது. ஏனென்றால், இதில் பெரிய 7000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இதுபோக 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்க இருக்கிறது.
இவ்வளவு பெரிய பேட்டரி கிடைத்தால், அதில் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. ஆனால், இந்த சியோமி 16 ஸ்மார்ட்போனில் IP68 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்க இருக்கிறது. அல்ட்ரா சோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வர இருக்கிறது.
இந்த பீச்சர்கள் மட்டுமே கசிந்துள்ளன. விலை விவரங்கள் வெளியாகவில்லை. செப்டம்பர் மாதத்துக்கு வெளியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் விலை விவரங்கள் மற்றும் சியோமி 16 சீரிஸில் உள்ள மற்ற மாடல்களின் விவரங்களும் தெரியவரும். அதிக பேட்டரி கேபாசிட்டியில் இந்த ஸ்மார்ட்போன் தனி வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








