எனக்கே ஷட்டர்-ஆ.. 6800mAh பிக் பேட்டரி, Snapdragon 8 Elite 2 சிப்செட்.. Xiaomi-யின் புது சிங்கக்குட்டி!
திடீரென பூதாகரமாக கிளம்பி இருக்கும் "பிக் பேட்டரி ஸ்மார்ட்போன்" டிரெண்டிற்கு.. ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இது பெரிய பேட்டரிகளை பேக் செய்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள நிறுவனம் தான். இதற்கிடையில் இந்நிறுவனம் "எனக்கே ஷட்டர்-ஆ!" என்று கூறும்படியாக, ஒரு புதிய பிக் பேட்டரி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.
அது ஷாவ்மீ 16 (Xiaomi 16) ஸ்மார்ட்போன் ஆகும். ஷாவ்மீ 16 சீரீஸின் வெண்ணிலா வேரியண்ட் ஆன இது பெரிஸ்கோப் கேமரா மற்றும் அதன் முன்னோடியுடன், அதாவது ஷாவ்மீ 15 மாடலுடன் ஒப்பிடும்போது பெரிய பேட்டரி உடன் வரும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அப்படி என்ன பேட்டரி? வேறு என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? எப்போது அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:

டிப்ஸ்டர் ஸ்மார்ட் பிகாச்சுவின் கூற்றுப்படி, ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போன் ஆனது 6800mAh பேட்டரியுடன் சோதிக்கப்படுகிறது. இது ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனில் இருக்கும் 5,400mAh யூனிட் உடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய அப்கிரேட் ஆக இருக்கும். மேலும் ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போனில் முந்தைய மாடலில் உள்ள 90W உடன் ஒப்பிடும்போது 100W பாஸ்ட் சார்ஜிங் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.
ஷாவ்மீ 16 எப்போது அறிமுகமாகும்? இது 2025 செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்றும், இது அக்டோபரில் அறிமுகமான முந்தைய தலைமுறை ஃபிளாக்ஷிப்களை விட மிகவும் முன்னதாகவே அறிமுகமாகும் என்றும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் முந்தைய மாடல்களை போலவே உலகளாவிய வெளியீடும் பிந்தைய தேதியில் நடக்க வேண்டும்.
ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (Xiaomi 16 Specifications Expected)? இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் (Snapdragon 8 Elite 2) கொண்டு இயக்கப்படலாம். இந்த பிளாக்ஷிப் சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படும் முதல் ஸ்மார்ட்போனாகவும் இது இருக்கும். இது 6.36 முதல் 6.73-இன்ச் வரையிலான பெரிய டிஸ்பிளேவை பேக் செய்யலாம். கூடுதல் விவரங்கள் வரும் மாதங்களில் வெளியாகும்.
ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும் (Xiaomi 16 Price Expected)? நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,999 க்கு அறிமுகமானது. ஆக ஷாவ்மீ 16 மாடல் ரூ.70,000 க்குள் அறிமுகம் செய்யப்படலாம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரூ. 69,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Xiaomi 15 Specifications):
- 6.36-இன்ச் FHD+ (1200 x 2670 பிக்சல்ஸ்) LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓ அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 (HyperOS 2.0)
- லைக்கா டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்
- OIS ஆதரவுடன் 50-மெகாபிக்ஸ் ப்ரைமரி சென்சார்
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS உடன் 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார்
- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5240mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 7, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யூஎஸ்பி 3.2 டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்


Click it and Unblock the Notifications








