Home
Mobile

அடுத்த சியோமி போன் ரெடி.. 6500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. 512ஜிபி மெமரி.. எந்த மாடல்?

சியோமி நிறுவனம் விரைவில் சியோமி 16 (Xiaomi 16) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த புதிய சியோமி போன் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமாக வடிவமைப்புடன் வெளிவரும். இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த சியோமி 16 போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

சியோமி 16 அம்சங்கள் (Xiaomi 16 Specifications): 6.3-இன்ச் பிளாட் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் சியோமி 16 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவம் வழங்கும்.

அடுத்த சியோமி போன் ரெடி.. 6500mAh பேட்டரி, 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் (Snapdragon 8 Elite 2 chipset) வசதி கொண்டுள்ளது இந்த சியோமி 16 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

அதேபோல் ஹைப்பர் ஓஎஸ் 3.0 (HyperOS 3.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் இந்த சியோமி 16 போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதி இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்கள் இந்த சியோமி 16 ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும். அதேபோல் இந்த போனில் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6500mAh பேட்டரி வசதியுடன் இந்த சியோமி 16 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் தரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியுடன் புதிய சியோமி 16 போன் அறிமுகமாகும்.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதி இந்த சியோமி 16 ஸ்மார்ட்போனில் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி என்எப்சி, ப்ளூடூத் 5.4 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atoms), டூயல் மைக்ரோபோன்கள்(dual microphones) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சியோமி போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, சற்று உயர்வான விலையில் இந்த சியோமி 16 போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 16 specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X