சின்ன டிஸ்பிளே, குட்டி பேட்டரி உடன் Xiaomi யின் Mini ஸ்மார்ட்போன்.. சீனாக்காரன் செஞ்சி விட்டான்யா!
ஒன்பிளஸின் மினி ஸ்மார்ட்போன், விவோவின் மினி ஸ்மார்ட்போனை தொடர்ந்து.. நாங்களும் போட்டிக்கு வரலாமா என்கிற படியாக சீன நிறுவனமான ஷாவ்மீயும் அதன் மினி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அது ஷாவ்மீ 16 ப்ரோ மினி (Xiaomi 16 Pro Mini) ஸ்மார்ட்போனாகும். இது ஷாவ்மீ 16 சீரிஸின் ஒரு பகுதியாக இருக்கும்.
ஷாவ்மீ 16 சீரீஸ் ஆனது இந்த ஆண்டு இறுதியில் சீனாவில் அறிமுகம் அறிமுகப்படுத்தப்படலாம். இந்த சீரீஸின் கீழ் பேஸிக் ஷாவ்மீ 16 (Xiaomi 16), ஷாவ்மீ 16 ப்ரோ (Xiaomi 16 Pro), ஷாவ்மீ 16 ப்ரோ மினி (Xiaomi 16 Pro Mini) மற்றும் ஷாவ்மீ 16 அல்ட்ரா (Xiaomi 16 Ultra) என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த சமீபத்திய லீக் தகவலின்படி, ஷாவ்மீ 16 சீரீஸில் 50 மெகாபிக்சல் செல்பீ சென்சார்கள் இடம்பெறும். குறிப்பாக ஷாவ்மீ 16 ப்ரோ மினி ஸ்மார்ட்போனில் பெரிய ப்ரைமரி ரியர் கேமரா சென்சார் பொருத்தப்பட்டிருக்கலாம் என்றும் டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் கூறுகிறார்.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போனில் பெரிஸ்கோப் ஷூட்டரும் இருக்கலாம் என்றும், இது வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின. மேலும் ப்ரோ மினி மாடலானது பேஸிக் ஷாவ்மீ 16 மாடலை விட சிறிய அளவிலா பேட்டரியையே கொண்டிருக்கும் என்றும் டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் கூறியுள்ளார்.
ஆக ஒரு பெரிய பேட்டரி, ஒரு பிளாக்ஷிப் லெவல் சிப்செட் மற்றும் ஒரு நடுத்தர அளவிலான டிஸ்பிளே ஆகியவற்றை தேடும் பயனர்கள் ஷாவ்மீ 16 ப்ரோ மினி பக்கம் சாயாமல் ஷாவ்மீ 16 மாடலின் மீது கவனம் செலுத்தலாம். ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போனில் 6,500mAh பேட்டரி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ட்ரிபிள் 50-மெகாபிக்சல் சென்சார்களை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்த ஷாவ்மீ 16 சீரீஸும் இன்னும் வெளியிடப்படாத ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 (Snapdragon 8 Elite 2) சிப்செட்டால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்பிளே அளவுகளை பொறுத்தவரை ப்ரோ மினி மற்றும் ப்ரோ மாடல்கள் ஆனது முறையே 6.3-இன்ச் மற்றும் 6.8-இன்ச் டிஸ்பிளேக்களை கொண்டிருக்கலாம்.
அதே நேரத்தில் பேஸிக் ஷாவ்மீ மாடலில் 6.5-இன்ச் டிஸ்பிளே இருக்கலாம். ஷாவ்மீ 16 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே அளவு குறித்த விவரங்கள் இல்லை. ஆனால் இது 1-இன்ச் 50-மெகாபிக்சல் SC5A0CS ஸ்மார்ட்சென்ஸ் கேமரா உடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஷாவ்மீ 15 அல்ட்ரா மாடல் ஆனது - லைக்கா டியூன் செய்யப்பட்ட குவாட் ரியர் கேமரா யூனிட் உடன் அறிமுகமானது.
அதில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி LYT-900 சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) - 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர் + OIS மற்றும் 3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி IMX858 டெலிஃபோட்டோ கேமரா + OIS மற்றும் 4.3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 200-மெகாபிக்சல் ISOCELL HP9 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் உள்ளது.
விலையை பொறுத்தவரை இந்தியாவில் ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதே போன்ற விலை நிர்ணயத்தை நாம் ஷாவ்மீ 16 அல்ட்ரா மாடலிலும் எதிர்பார்க்கலாம். ஷாவ்மீ 16 ப்ரோ மினி மாடலின் விலையை பொறுத்தவரை, இது ரூ.69,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








