Home
Mobile

செப். 2025 ஐ சிதற விடும் Xiaomi.. 7000mAh இல்ல அதுக்கும் மேல.. இது முரட்டு பிக் பேட்டரி ஸ்மார்ட்போன்-ஆ இருக்கே

ஏற்கனவே "பேட்டரி கெப்பாசிட்டி" என்று வந்துவிட்டால் ஷாவ்மீ நிறுவனத்தை கையில் பிடிக்க முடியாது. இதற்கிடையில் இந்நிறுவனம் உண்மையிலேயே ஒரு முரட்டு பிக் பேட்டரி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அது என்ன மாடல்? அதில் எவ்வளவு பேட்டரி கெப்பாசிட்டி இருக்கும்? எப்போது அறிமுகம்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்:

ஷாவ்மீ நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் "பேட்டரி லைஃப்" ஆனது ஒரு முக்கியமான விற்பனை புள்ளியாக மாற்றக்கூடும். ஏனென்றால் ஒரு புதிய லீக்ஸ் தகவலின்படி, வரவிருக்கும் ஷாவ்மீ 16 சீரீஸில் (Xiaomi 16 Series) நாம் இதுவரை கண்டிராத கெப்பாசிட்டி கொண்ட மிகப்பெரிய சிலிக்கான்-கார்பன் பேட்டரி பேக் செய்யப்படலாம்.

Xiaomi: 7000mAh இல்ல அதுக்கும் மேல.. முரட்டு பிக் பேட்டரி ஸ்மார்ட்போன்

டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் வழியாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி ஸ்டாண்டர்ட் ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போன் ஆனது 7000mAh பேட்டரியை கொண்டிருக்கும். நினைவூட்டும் வண்ணம் ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட் ஆனது 5,240mAh பேட்டரி உடன் அறிமுகமானது. ஆக 7000mAh என்பது உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய பாய்ச்சல் ஆகும்

இதைவிட பெரிய பாய்ச்சல் ஷாவ்மீ 16 ப்ரோ மேக்ஸ் (Xiaomi 16 Pro Max) மாடலில் நாம் பார்க்கலாம் இது ஒரு பெரிய 7500mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். இது உண்மையாகும் பட்சத்தில் இன்றுவரை எந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிலும் நாம் காணாத பிக் பேட்டரி இதில் இடம்பெறும்.

இந்த சீரிஸின் இன்னொரு மாடல் ஆன ஷாவ்மீ 16 ப்ரோ (Xiaomi 16 Pro) 6300mAh பேட்டரி உடன் வரும் என்று கூறப்படுகிறது. இது பழைய ஷாவ்மீ 15 ப்ரோ (Xiaomi 15 Pro) மாடலில் உள்ள 6100mAh பேட்டரியை விட சற்று அதிகமாகும்

இந்த அளவிலான பெரிய பேட்டரிகள் "எதிர்பாராதவை" ஒன்றுமல்ல. இதற்கு முன்னால் வந்த லீக்ஸ் இதே போன்ற புள்ளிவிவரங்களையே குறிக்கின்றன. மேலும் ஆப்பிள், சாம்சங் அல்லது கூகுள் ஆகியவற்றிற்கு முன்பாக சிலிக்கான்-கார்பன் பேட்டரிகளை ஏற்றுக்கொண்டு, அதை பரவலாக்க சீன நிறுவனங்கள் தீயாக வேலை செய்து வருவதால் ஷாவ்மீ நிறுவனம் இதை செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை

ஷாவ்மீ 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஷாவ்மீயின் இந்த புதிய சீரீஸ் குவால்காமின் "ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5" சிப் உடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிப்செட் செப்டம்பர் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கேமராக்களை பொறுத்தவரை,ஸ் ஷாவ்மீ 16 அல்ட்ரா தான் கிங் ஆக இருக்கும். இது 1 இன்ச் பிரைமரி சென்சார் மற்றும் 200எம்பி டெலிஃபோட்டோ லென்ஸை கொண்டிருக்கலாம் என்று பேச்சுக்கள் அடிபடுகிறது. ஷாவ்மீ 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் எப்படியும் இந்த செப்டம்பர் 2025 க்குள் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகமான ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.36-இன்ச் FHD+ (1200 x 2670 பிக்சல்ஸ்) LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 (HyperOS 2.0)

- லைக்கா டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்
- OIS ஆதரவுடன் 50-மெகாபிக்ஸ் ப்ரைமரி சென்சார்
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS உடன் 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார்

- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5240mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 7, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யூஎஸ்பி 3.2 டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்
- விலை ரூ.64,999 (12ஜிபி ரேம் + 512ஜிபி)

Best Mobiles in India

English summary
Xiaomi 16 Pro Max Could Pack 7500mAh Battery Largest in Any flagship Phone To Date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X