Big Battery ஜுரத்தில் ஸ்மார்ட்போன் பிராண்டுகள்.. 7000mAh பேட்டரி உடன் புதிய Xiaomi போன்.. என்ன மாடல்?
உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பிராண்டுகளுக்கு புதிய ஜுரம் ஒன்று தொற்றிக் கொண்டுள்ளது போல் தெரிகிறது. அது 7000mAh அல்லது அதற்கும் மேலான பேட்டரியை கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்கிற ஜுரமாகும். 7300mAh பேட்டரி உடன் ஐக்யூ இஸட்10 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரியல்மி வருகிற ஏப்.23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ள ரியல்மி ஜிடி 7-ல் 7200mAh பேட்டரி இடம்பெறும் என்பதை உறுதி செய்துள்ளது.
இதற்கிடையில் ஷாவ்மீ நிறுவனம் இதேபோன்ற பெரிய பேட்டரி கெப்பாசிட்டி கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன மாடல்? எப்போது அறிமுகம் செய்யப்படலாம்? வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்யலாம்? என்ன விலைக்கு வரலாம்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? எப்போது அறிமுகமாகும்? நாம் இங்கே பேசுவது ஷாவ்மீ 16 (Xiaomi 16) ஸ்மார்ட்போனை பற்றித்தான். ஷாவ்மீ 15 (Xiaomi 15) ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாவ்மீ 16 என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? லேட்டஸ்ட் லீக்ஸ் ஒன்று - ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite 2 ) அல்லது டைமன்சிட்டி 9500 (Dimensity 9500) சிப்பை கொண்டிருக்கும் என்றும்.. இது 7000mAh பேட்டரியுடன் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கிறது.
இது உண்மையாக இருந்தால் ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனில் நாம் கண்ட 5400mAh பேட்டரி உடன் ஒப்பிடும் போது இது குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாக இருக்கும். ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போனின் 7000mAh பேட்டரி ஆனது செல் அதிக அடர்த்தி கொண்ட சிலிக்கான்-கார்பன் பேட்டரி தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட பேட்டரி ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பேட்டரி தொழில்நுட்பம், மிகவும் திறமையான நெக்ஸ்ட் ஜெனரஷன் ஃபிளாக்ஷிப் சிப்செட்டின் செயல்திறன் ஆதாயங்களுடன் இணைக்கப்படும் என்பதால், இது பிரீமியம் போன்களின் சகிப்புத்தன்மையை மறுவரையறை செய்ய கூடியதாக இருக்கும். ஆனால் இங்கே இன்னொரு பிரச்சனையும் உள்ளது - பெரிய பேட்டரி என்றாலே காம்பாக்ட் டிசைன் இருக்காது
ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போன் ஆனது 6.36-இன்ச் டிஸ்பிளே மற்றும் திடமான பேட்டரி லைஃப் கொண்ட ஒரு காம்பாக்ட் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக சந்தையில் தன்னை நிலைநிறுத்தி கொண்டது. ஆனால் ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போனில் அதை நாம் எதிர்பார்க்க முடியாது. இது பெரிய டிஸ்பிளே மற்றும் பெரிய பேட்டரி மற்றும் அதற்கு ஏற்ற எடையை கொண்டிருக்கும்.
ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? முந்தைய அறிக்கைகளின்படி இது ரூ.69,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். ஆனால் இதில் பேக் செய்யப்படலாம் என்கிற அம்சங்களை வைத்து பார்க்கும் போது, இதன் விலை இன்னும் அதிகமாக இருக்கலாம். நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது
ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.36-இன்ச் FHD+ (1200 x 2670 பிக்சல்ஸ்) LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓ அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 (HyperOS 2.0)
- லைக்கா டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்
- OIS ஆதரவுடன் 50-மெகாபிக்ஸ் ப்ரைமரி சென்சார்
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS உடன் 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார்
- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5240mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 7, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யூஎஸ்பி 3.2 டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்


Click it and Unblock the Notifications