யார் வேண்டாம்னு சொல்லுவாங்க.. 90W சார்ஜிங்.. 50MP கேமரா.. IP68 ரேட்டிங்.. புதிய Xiaomi போன் அறிமுகம்..
சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி 15டி ப்ரோ (Xiaomi 15T Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த புதிய சியோமி 15டி ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போது ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும். இப்போது இந்த புதிய சியோமி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
சியோமி 15டி ப்ரோ அம்சங்கள் (Xiaomi 15T Pro Specifications): 6.83-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது சியோமி 15டி ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ், 480Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.

ஆக்டா-கோர் டைமன்சிட்டி 9400 பிளஸ் 3என்எம் எஸ்ஒசி (Octa-Core Dimensity 9400+ 3nm SoC) சிப்செட் வசதியுடன் சியோமி 15டி ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் இம்மார்டலிஸ் ஜி925 எம்சி12 ஜிபியு ( Immortalis-G925 MC12 GPU) வசதியும் உள்ளது.
Leica கேமரா செட்டப் உடன் இந்த புதிய சியோமி போன் வெளிவந்துள்ளது. OIS ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 50எம்பி சூப்பர் டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த புதிய சியோமி 15டி ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். அதேபோல் போர்ட்ரெய்ட்எல்எம் 2.0 (PortraitLM 2.0), கலர்எல்எம் 2.0 (ColorLM 2.0 ) உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்களும் உள்ளன. இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதிகளும் இந்த போனில் உள்ளன.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஹை-ரெஎஸ் ஆடியோ (Hi-Res Audio), டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட ஆதரவுகளுடன் சியோமி 15டி ப்ரோ போன் வெளிவந்துள்ளது. மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் கொண்டுள்ளது இந்த போன்.
5500mAh பேட்டரி உடன் சியோமி 15டி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஹைப்பர்சார்ஜ், 50W வயர்லெஸ் ஹைப்பர்சார்ஜ் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இந்த புதிய சியோமி போனின் எடை 210 கிராம் ஆகும்.

அதுவும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் 6.4, ஜிபிஎஸ், குளோனாஸ், கலிலியோ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சியோமி 15டி போனில் உள்ளன. பிளாக், கிரே, Mocha கோல்டு உள்ளிட்ட நிறங்களில் இந்த புதிய போனை வாங்க முடியும்.
சியோமி 15டி ப்ரோ விலை:
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட சியோமி 15டி ப்ரோ மாடலின் 799.99 Euros (இந்திய மதிப்பில் ரூ.83,330)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட சியோமி 15டி ப்ரோ மாடலின் 899.99 Euros (இந்திய மதிப்பில் ரூ.93,750)
12ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட சியோமி 15டி ப்ரோ மாடலின் 999.99 Euros (இந்திய மதிப்பில் ரூ.1,04,165)


Click it and Unblock the Notifications








