மார்க்கெட்டே திணறப்போகுது.. 90W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. வருகிறது புதிய Xiaomi போன்.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி 15டி ப்ரோ (Xiaomi 15T Pro) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது FCC சான்றிதழ் தளத்தில் 2506BPN68G என்ற மாடல் நம்பர் உடன் இந்த சியோமி போன் காணப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
சியோமி 15டி ப்ரோ அம்சங்கள் (Xiaomi 15T Pro specifications): 12ஜிபி ரேம் + 256ஜபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி வசதியுடன் இந்த புதிய சியோமி போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹைப்பர் ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

50எம்பி OmniVision OVX9100 மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி சாம்சங் JN5 telephoto கேமரா என்கிற ட்ரிபிள் கேமரா அமைப்புடன் இந்த புதிய சியோமி 15டி ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5500mAh பேட்டரி வசதியுடன் சியோமி 15டி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9400 பிளஸ் (Dimensity 9400 Plus) சிப்செட் உடன் சியோமி 15டி ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வசதி கொண்டுள்ளது இந்த சியோமி 15டி ப்ரோ (In-display Fingerprint Sensor) ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய சியோமி 15டி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் சியோமி 15டி ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த புதிய சியோமி ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








