Home
Mobile

வந்துட்டேன்னு சொல்லு.. Leica கேமரா.. OLED டிஸ்பிளே.. புது சியோமி 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி 15டி (Xiaomi 15T) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய போன் ஒஎல்இடி டிஸ்பிளே, டைமன்சிட்டி சிப்செட், 67W சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சியோமி 15டி அம்சங்கள் (Xiaomi 15T Specifications): 6.83-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது சியோமி 15டி. மேலும் இதன் டிஸ்பிளே 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ், 480Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

வந்துட்டேன்னு சொல்லு.. புது சியோமி 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

3.25ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் 8400 அல்ட்ரா 4என்எம் (3.25GHz Octa Core MediaTek Dimensity 8400 Ultra 4nm) வசதியுடன் இந்த சியோமி 15டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி720 எம்சி6 ஜிபியு (Mali-G720 MC6 GPU) கிராபிக்ஸ் வசதியும் இந்த போனில் உள்ளது.

Leica கேமரா செட்டப் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது OIS ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 50எம்பி போர்ட்ரெயிட் டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த புதிய சியோமி 15டி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும்இந்த போனில் உள்ளது.

குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் இந்த போனில் போர்ட்ரெய்ட்எல்எம் 2.0 (PortraitLM 2.0), கலர்எல்எம் 2.0 (ColorLM 2.0 ) உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்களும் உள்ளன. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதிகளும் இந்த போனில் உள்ளன.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஹை-ரெஎஸ் ஆடியோ (Hi-Res Audio), டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட ஆதரவுகளுடன் சியோமி 15டி போன் வெளிவந்துள்ளது. மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் கொண்டுள்ளது இந்த போன்.

5500mAh பேட்டரி உடன் சியோமி 15டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறப்பாக இது 50 நிமிடங்களில் 100% பேட்டரியை சார்ஜ் செய்யும் என்று சியோமி தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த புதிய சியோமி போனின் எடை 194 கிராம் ஆகும்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் 6.4, ஜிபிஎஸ், குளோனாஸ், கலிலியோ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சியோமி 15டி போனில் உள்ளன. பிளாக் (Black), கிரோ (Gray), ரோஸ் கோல்டு (Rose Gold) நிறங்களில் இந்த புதிய சியோமி போனை வாங்க முடியும்.

வந்துட்டேன்னு சொல்லு.. புது சியோமி 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

சியோமி 15டி விலை:
தற்போது சியோமி 15டி போன் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய சியோமி 15டி போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட சியோமி 15டி மாடலின் விலை 649.99 Euros (இந்திய மதிப்பில் ரூ.67,705)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட சியோமி 15டி மாடலின் விலை 699.99 Euros (இந்திய மதிப்பில் ரூ.72,915)

Best Mobiles in India

English summary
Xiaomi 15T launched in Europe: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X