Home
Mobile

Xiaomi சைலண்ட் சம்பவம்.. IP68 ரேட்டிங்.. 6100mAh பேட்டரி.. புது 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி 15எஸ் ப்ரோ (Xiaomi 15S Pro) ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 6100mAh பேட்டரி, 50எம்பி கேமரா, 90W சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சியோமி 15எஸ் ப்ரோ அம்சங்கள் (Xiaomi 15S Pro Specifications): 6.73-இன்ச் 2கே எம்8 12-பிட் ஒஎல்இடி டிஸ்பிளே (2K M8 12-bit OLED LTPO display) வசதியுடன் இந்த சியோமி 15எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், டிசி டிம்மிங், சியோமி செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் 2.0 (Xiaomi Ceramic Glass protection 2.0) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

Xiaomi சைலண்ட் சம்பவம்.. புது 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

3.9 ஜிகாஹெர்ட்ஸ் 10-பிட் கோர் சியோமி XRING 01 3என்எம் எஸ்ஒசி (3.9GHz 10-Core Xiaomi XRING 01 3nm SoC) சிப் உடன் இந்த புதிய சியோமி 15எஸ் ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது.இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis G925 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை வாங்கலாம்.

50எம்பி Light Fusion 900 மெயின் சென்சார் + 50எம்பி Leica அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த சியோமி 15எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது.

சியோமி ஹைப்பர் ஓஎஸ் 2.0 (Xiaomi HyperOS 2.0) மூலம் இந்த போன் இயங்குகிறது. யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos),4 மைக்ரோபோன்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த புதிய சியோமி 15எஸ் ப்ரோ போன் வெளிவந்துள்ளது.

Take a Poll

IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் வெளிவந்துள்ளது சியோமி 15எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன். 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன.

6100mAh பேட்டரி உடன் சியோமி 15எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Xiaomi சைலண்ட் சம்பவம்.. புது 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

டிராகன் ஸ்கேல் ஃபைபர் வெர்ஷன்(Dragon scale fiber version), ஃபார் ஸ்கை ப்ளூ (Far Sky Blue) நிறங்களில் இந்த போன் வாங்க முடியும். ஆனால் இந்த சியோமி 15எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட சியோமி 15எஸ் ப்ரோ போனின் விலை 5499 yuan (இந்திய மதிப்பில் ரூ.65,610) ஆக உள்ளது. பின்பு இதன் 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை 5999 yuan (இந்திய மதிப்பில் ரூ.71,580) ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 15S Pro launched in China: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X