Home
Mobile

மார்ச் 2 வரை எந்த போனும் வாங்கிடாதீங்க.. அப்புறம் ரொம்ப வருத்தப்படுவீங்க.. Xiaomi இறக்கும் 2 சிங்கக்குட்டி!

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்தின் நம்பர் சீரிஸை அந்நிறுவனத்தின் சிங்கக்குட்டிகள் என்றே கூறலாம். அப்படியான 2 புதிய சிங்கக்குட்டிகள், அதாவது 2 புதிய நம்பர் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற மார்ச் 2 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது ஷாவ்மீ 15 சீரீஸ் (Xiaomi 15 Series) ஆகும்!

இந்த சீரீஸின் கீழ் ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்ட ஷாவ்மீ 15 (Xiaomi 15) உடன் சேர்ந்து இன்னும் எங்குமே அறிமுகம் ஆகாத ஷாவ்மீ 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இரண்டு மாடல்களுமே அதிநவீன அம்சங்கள், மேம்பட்ட கேமரா செட்டப் உடன் வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

Xiaomi இறக்கும் 2 சிங்கக்குட்டி!

சீன நிறுவனமான ஷாவ்மீ அதன் ஷாவ்மீ இந்தியா எக்ஸ் பக்கம் வழியாக ஷாவ்மீ 15 சீரிஸின் இந்திய வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தியது. ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதியான (India Launch Date) 2 மார்ச் 2025 ஆனது அதன் உலகளாவிய வெளியீட்டு தேதியுடன் (Global Launch Date) ஒற்றுப்போகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.36-இன்ச் 8T LTPO டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16ஜிபி வரை LPDDR5X ரேம்
- 1டிபி வரை UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- லைக்கா-பிராண்டட் டிரிபிள் ரியர் கேமரா யூனிட் மற்றும் Summilux லென்ஸ்

- 50 மெகாபிக்சல் லைட் ஃப்யூஷன் 900 சென்சார்
- 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- ஐபி68 ரேட்டிங்
- 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5400mAh பேட்டரி

ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மாட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? பெரும்பாலும் ஷாவ்மீ 15 அல்ட்ராவானது, அதன் முன்னோடியில் காணப்பட்ட சிக்னேச்சர் சர்க்கிள் கேமரா யூனிட்டை தக்க வைத்துக் கொள்ளும். அதுவொரு குவாட் ரியர் கேமரா செட்டப் ஆக இருக்கும். இதன் கேமரா செட்டப்பின் மேல்-வலது மூலையில் ஒரு பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் (Periscope Telephoto Lens) இடம்பெறும். அதனுடன் மூன்று கூடுதல் லென்ஸ்கள் கேமரா செட்டப்பின் கீழ் பகுதியில் வைக்கப்படும்

ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் தொழில்நுட்பத்துடனான 2கே மைக்ரோ-கர்வ்டு டிஸ்ப்ளே இடம்பெறும். சிப்செட்டை பொறுத்தவரை இது தடையற்ற செயல்திறனுக்காக ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட்டை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஒரு பெரிய 6,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் மற்றும் 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும்.

மேலும் இது ரீமியம் கைவினைத்திறனை பிரதிபலிக்கும் வகையில், வேகன் லெதர் (Vegan Leather), பைபர்கிளாஸ் (Fibergass) மற்றும் செராமிக் (Ceramic) உள்ளிட்ட ஆடம்பரமான பினிஷ்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் இருக்கும் கூடுதலாக, இது இசிம் (eSIM) செயல்பாட்டை கொண்ட ஷாவ்மீயின் முதல் அல்ட்ரா-சீரிஸ் ஸ்மார்ட்போனாகவும் இருக்கும்.

ஷாவ்மீ 15, ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு (Xiaomi 15, Xiaomi 15 Ultra Price) அறிமுகம் செய்யப்படலாம்? விலையை பொறுத்தவரை ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.1,09,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம், ஷாவ்மீ 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.99,900 க்கு அறிமுகமானது. மறுகையில் உள்ள ஷாவ்மீ 15 ஆனது ரூ.78,000 - ரூ.80,000 க்குள் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 15 Xiaomi 15 Ultra to Launch in India on 2025 March 2 See Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X