Home
Mobile

மார்ச் 11 வரை எந்த Camera Phone-ம் வாங்கிடாதீங்க.. Xiaomi-யின் 2 சிங்கக்குட்டிகள் இந்தியாவில் அறிமுகம் ஆகுது!

ஐபோன் 16இ உட்பட ஆப்பிளின் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்கள், சாம்சங்கின் லேட்டஸ்ட் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் உட்பட பல பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு நேரடி போட்டியாக பார்க்கப்படும் ஷாவ்மீ 15 சீரீஸ் (Xiaomi 15 Series) ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுக தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஷாவ்மீ 15 சீரீஸின் கீழ் ஷாவ்மீ 15 (Xiaomi 15) மற்றும் ஷாவ்மீ 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) என 2 மாடல்கள் வருகிற மார்ச் 11 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்விரு மாடல்களும் குறிப்பிட்ட தேதியில், இந்திய நேரடி மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று ஷாவ்மீ இந்தியா அறிவித்துள்ளது.

மார்ச் 11.. Xiaomi-யின் 2 சிங்கக்குட்டிகள் இந்தியாவில் அறிமுகம்!

இதுகுறித்த போஸ்டரில் அல்ட்ரா வேரியண்ட் ஆனது சில்வர் குரோம் கலர் ஆப்ஷனிலும் மற்றும் ஸ்டாண்ர்ட் வேரியண்ட் ஆனது பிரைட் சில்வர் கலர் ஆப்ஷனிலும் இருப்பதை காண முடிகிறது. பார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2025 நிகழ்விற்கு முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் ஷாவ்மீ 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவுடன் வருகிறது. மேலும் இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஷாவ்மீயின் ஹைப்பர் ஓஎஸ் 2 கொண்டு இயங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கு 4 மேஜர் ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காமின் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான LPDDR5x ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3200நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.73-இன்ச் WQHD+ (1440 x 3200 பிக்சல்ஸ்) குவாட் கர்வ்டு LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது

கேமராக்களை பொறுத்தவரை சியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் லைக்கா பிராண்டால் ட்யூன் செய்யப்பட்ட 4 கேமரா செட்டப் உள்ளது. இது 1 இன்ச் டைப் LYT-900 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது.

கூடவே இது 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா, ஓஐஎஸ் மற்றும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி IMX858 டெலிஃபோட்டோ கேமரா சென்சார் மற்றும் ஓஐஎஸ் மற்றும் 4.3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் உடன் 200-மெகாபிக்சல் ஐசோசெல் HP9 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 512ஜிபி UFS 4.1 ஸ்டோரேஜை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 7, ப்ளூடூத் 6, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி 3.2 ஜென் 2 டைப்-சி போர்ட் ஆகியவற்றை வழங்குகிறது.

பேட்டரியை பொறுத்தவரை 90 W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 80 W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடன் 5,410mAh சிலிக்கான் கார்பன் பேட்டரியை கொண்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சேஸ் ஆனது ஏரோஸ்பேஸ் கிரேடு கிளாஸ் ஃபைபரை பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி68 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. கடைசியாக ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் போர்டில் உள்ள சென்சார்களை பொறுத்தவரை ஆக்ஸலரோமீட்டர், கைரோஸ்கோப், ப்ராக்ஸிமிட்டி சென்சார், காம்பஸ், பேரோமீட்டர் மற்றும் இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் ஆகியவைகளை கொண்டுள்ளது.

ஷாவ்மீ 15 முக்கிய அம்சங்கள்:
- 6.36-இன்ச் 8T LTPO AMOLED 120Hz டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 1TB வரை UFS 4.0 இன்-பில்ட் ஸ்டோரேஜ்
- 50 மெகாபிக்சல் சென்சார் கொண்ட ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS)
- 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் ஷூட்டர்
- லைக்கா பிராண்டட் டிரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 32 மெகாபிக்சல் கேமரா
- 5,240mAh பேட்டரி
- 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 15 Xiaomi 15 Ultra India Launch Date Announced Its March 11 Check Out Major Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X