Home
Mobile

வந்துடுச்சு.. Xiaomi செஞ்சிடுச்சு.. iPhone-கள் ஆடிப்போகும் விலை.. 12GB ரேம், Leica கேமரா, 5240mAh பேட்டரி!

இந்தியாவில் ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் மாடல்களாக ஷாவ்மீ 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்கீழ் ஷாவ்மீ 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) மற்றும் பேஸிக் ஷாவ்மீ 15 (Xiaomi 15) என 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.36-இன்ச் FHD+ (1200 x 2670 பிக்சல்ஸ்) LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓ அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 (HyperOS 2.0)

Xiaomi 15 செஞ்சிடுச்சு.. iPhone-கள் ஆடிப்போகும் விலை!

- லைக்கா டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்
- OIS ஆதரவுடன் 50-மெகாபிக்ஸ் ப்ரைமரி சென்சார்
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS உடன் 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார்

- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5240mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 7, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யூஎஸ்பி 3.2 டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்

ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனின் விலை: இந்தியாவில் ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.5,000 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் கிடைக்கும் மற்றும் ரூ. 5,999 மதிப்புள்ள இலவச ஷாவ்மீ கேர் சலுகைகளை பெறலாம்.

விற்பனையை பொறுத்தவரை ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனின் முன்பதிவு வருகிற மார்ச் 19 ஆம் தேதி முதல் ஏப்ரல் 2 ஆம் தேதி நடக்கும். இந்த ஸ்மார்ட்போன் அமேசான் (Amazon), ஷாவ்மீ இந்தியா இ-ஸ்டோர் (Xiaomi India e-store) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகள் வழியாக பிளாக், மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.73-இன்ச் WQHD+ LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓ அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 (HyperOS 2.0)

- லைக்கா டியூன் செய்யப்பட்ட குவாட் ரியர் கேமரா யூனிட்
- 50-மெகாபிக்சல் ப்ரைமரி LYT-900 சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்)
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- OIS மற்றும் 3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி IMX858 டெலிஃபோட்டோ கேமரா
- OIS மற்றும் 4.3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 200-மெகாபிக்சல் ISOCELL HP9 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா

- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார்
- 90W வயர்டு மற்றும் 80W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5410mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 7, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யூஎஸ்பி 3.2 டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்
- 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் இலவச போட்டோகிராஃபி கிட் லெஜெண்ட் எடிஷன் (Photography Kit Legend Edition) மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் ரூ.10,000 உடனடி தள்ளுபடி சலுகையை பெறுவார்கள். யூஎஸ்பி டைப்-சி கேமரா ஹேண்டில், 2,000mAh பேட்டரி மற்றும் பிரிக்கக்கூடிய ஷட்டர் பட்டன் கொண்ட ஷாவ்மீ 15 அல்ட்ரா போட்டோகிராஃபி கிட் லெஜெண்ட் எடிஷன்-ன் விலை ரூ. 11,999 ஆகும். என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு வருகிற மார்ச் 19 ஆம் தேதி முதல் ஏப்ரல் 2 ஆம் தேதி நடக்கும். பின்னர் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். இதற்கிடையில் இந்த ஸ்மார்ட்போனின் ஏர்லி அக்சஸ் சேல் ஆனது மார்ச் 18 அன்று நடைபெறும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 15 With Snapdragon 8 Elite Chipset Leica Camera Setup Launched in India Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X