Home
Mobile

ஏப்.4-க்கு குறிச்சாச்சு! 12GB ரேம்.. 5240mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 8K கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

கிரிஸ்டெல்ரெஷ் அமோலெட் டிஸ்பிளே, லெய்கா சம்மிலக்ஸ் கேமரா சிஸ்டம், 60X டிஜிட்டல் ஜூமிங், 8K வீடியோ ரெக்கார்டிங், 90W ஹைப்பர் சார்ஜ், 50W வயர்லெஸ் சார்ஜ் மற்றும் 5240mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல் சியோமி ஹைப்பர் ஏஐ பீச்சர்களுடன் வெளியான சியோமி 15 (Xiaomi 15) போனின் ஓப்பன் சேல் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்குகிறது. இந்த சியோமி 15 போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் மார்ச் 11ஆம் தேதி இந்த சியோமி 15 போன் வெளியாகியது. அமேசான் (Amazon) மற்றும் எம்ஐ (Mi) தளங்களில் ப்ரீ-ஆர்டர் தொடங்கிவிட்டது. இந்த ப்ரீ-ஆர்டர் ஏப்ரல் 2ஆம் தேதி வரையில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆகவே, ஓப்பன் சேல் அதற்கு பிறகு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது, ஏப்ரல் 4ஆம் தேதி ஓப்பன் சேல் நடக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

ஏப்.4-க்கு குறிச்சாச்சு! 12GB ரேம்.. 5240mAh பேட்டரி.. 90W சார்ஜிங்!

சியோமி 15 அம்சங்கள் (Xiaomi 15 Specifications): இந்த சியோமி போனானது, மைக்ரோ-கர்வ்ட் அலுமினியம் ஃபிரேம் (Micro-curved Aluminium Frame) டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. வெறும் 1.38 எம்எம் அல்ட்ரா-தின் பெசல்கள் (Ultra-thin Bezels) கிடைப்பதால் 4 பக்கமும் ஒரே மாதிரியான குவாட் கர்வ்ட் டிசைன் (Quad-curved Design) கிடைக்கிறது. பிளாக் (Black), கிரீன் (Green) & ஒயிட் (White) கலர்கள் உள்ளன.

சியோமி ஷீல்டு கிளாஸ் (Xiaomi Shield Glass) புரொடெக்சன் கொண்ட 6.36 இன்ச் (2670 x 1200 பிக்சல்கள்) கிரிஸ்டல்ரெஷ் அமோலெட் (CrystalRes AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பிரீமியம் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. மேலும், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.

மேலும், டிசி டிம்மிங் (DC Dimming), ப்ரோ எச்டிஆர் (Pro HDR), எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு வெட் டச் டெக்னாலஜி (Wet Touch Technology) கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவில் அல்ட்ரா பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். லெய்கா சம்மிலக்ஸ் ஆப்டிகல் லென்ஸ் (Leica Summilux Optical Lens) கொண்ட கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.

50 எம்பி லெய்கா மெயின் கேமரா + 50 எம்பி லெய்கா ப்ளோட்டிங் டெலிபோட்டோ கேமரா + 50 எம்பி லெய்கா அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டிரிபிள் ரியர் செட்டப் (Triple Rear Setup) உள்ளது. மெயின் கேமரா மட்டுமல்லாமல் டெலிபோட்டோவிலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. மெயின் கேமராவில் கூடுதலாக லைட் ஃப்யூஷன் 900 (Light Fusion 900) சென்சார் கிடைக்கிறது.

ஏப்.4-க்கு குறிச்சாச்சு! 12GB ரேம்.. 5240mAh பேட்டரி.. 90W சார்ஜிங்!

8K வீடியோ ரெக்கார்டிங், டால்பி விஷன் ரெக்கார்டிங், 4K ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது. 60X டிஜிட்டல் ஜூம் (Digital Zoom), சியோமி ப்ரோபோகஸ் (Xiaomi ProFocus) கிடைக்கிறது. இந்த ப்ரோபோகஸ் மூலம் மோஷன் டிராக்கிங் போகஸ் (Motion Tracking Focus), ஐ டிராக்கிங் போகஸ் (Eye Tracking Focus) மற்றும் மோஷன் கேப்ச்சர் (Motion Capture) சப்போர்ட் கிடைக்கிறது. லெய்கா பீச்சர்களும் கிடைக்கின்றன.

ஆகவே, லெய்கா போட்டோகிராபி ஸ்டைல்கள் (Leica Photographic Styles), லெய்கா ஃபில்டர்கள் (Leica Filters) போன்றவை கிடைக்கிறது. சூப்பர் மேக்ரோ மற்றும் போர்ட்ராய்டு மோட் உள்ளது. வீடியோகிராபி பீச்சர்களை பார்க்கையில், அல்ட்ரா நைட் வீடியோ (Ultra Night Video), ஷூட்ஸ்டெடி (ShootSteady) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த சியோமி 15 போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

இந்த கேமராவிலும் 4K வீடியோ ரெக்கார்டிங், டைம்-லேப்ஸ் செல்பீ போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 90W ஹைப்பர்சார்ஜ் (Hyper Charge) மற்றும் 50W வயர்லெஸ் ஹைப்பர்சார்ஜ் (Wireless Hyper Charge) கொண்ட 5240mAh பேட்டரி பேட்டரி கிடைக்கிறது. ஓவர் சா்ஜிங், ஹீட் கன்ட்ரோல்களுக்காக சியோமி சர்ஜ் பேட்டரி சிஸ்டம் (Xiaomi Surge Battery System) கிடைக்கிறது. மேலும், சியோமி சர்ஜ் பி3 (Xiaomi Surge P3) சிப் உள்ளது.

இதுபோக சியோமி விங்-டைப் ஐஸ்லூப் சிஸ்டம் (Xiaomi Wing Type IceLoop System) கொடுக்கப்படுகிறது. ஆகவே, பேட்டரியில் பிரீமியம் காட்டி இருக்கிறது. அப்கம்மிங் பிரீமியம் மாடல்களில் கிடைப்பதை போலவே இந்த போனிலும் ஏஐ பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆகவே, சியோமி ஹைப்பர்ஏஐ (Xiaomi HyperAI) மூலம் ஏஐ ரைட்டிங் (AI Writing) மற்றும் ஏஐ ஸ்பீச் ரெககனைசேஷன் (AI Speech Recognition) வருகிறது.

மேலும், ஏஐ இன்டர்பிரிட்டர் (AI Interpreter) மற்றும் ஏஐ கிரியேட்டிவிட்டி அசிஸ்டன்ட் (AI Creativity Assistant) பீச்சர்கள் கிடைக்கின்றன. அதேபோல வழக்கமாக கிடைக்கும் சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search) மற்றும் கூகுள் ஜெமினி (Google Gemini) சப்போர்ட் கிடைக்கிறது. அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-screen Fingerprint Sensor), ஏஐ பேஸ் அன்லாக் (AI Face Unlock) கிடைக்கிறது.

இந்த சியோமி 15 போனில் IP68 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த ரெசிஸ்டன்ட் மூலம் 1.5 மீட்டர்கள் ஆழம் மற்றும் 30 நிமிடங்களுக்கு தண்ணீரில் தாக்குபிடிக்கும். ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆகிய ஆடியோ பீச்சர்கள் உள்ளன. 8.08 எம்எம் தடிமன் மற்றும் 181 கிராம் எடை கொண்டிருக்கிறது.

அல்ட்ரா பிரீமியம் மல்டிமீடியா பர்ஃபாமென்ஸ் மற்றும கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. சியோமி நிறுவனத்தின் ஹைப்பர்ஓஎஸ் 2 (HyperOS 2) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. ஈசிம் பயன்படுத்தலாம்.

Take a Poll

12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ. 64,999ஆக இருக்கிறது. இருப்பினும், ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.5,000 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, ரூ.59,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அமேசான் மற்றும் சியோமி தளங்களில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. ஏப்ரல் 4ஆம் தேதி முதல் ஓப்பன் சேல் தொடங்க இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 15 With 50MP Camera Goes On Open Sale From April 4 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X