Home
Mobile

வெளுத்து கட்டியாச்சு.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 5240mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஓஎல்இடி டிஸ்பிளே, லெய்கா கேமரா சிஸ்டம், 5240mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், 12 ஜிபி ரேம் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் சியோமி 15 (Xiaomi 15) போன் வெளியாகி இருக்கிறது. மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொடுக்கிறது. இப்போது, குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கும் இந்த போனானது வரும் மார்ச் 11ஆம் தேதி இந்தியாவில் வெளியாக இருக்கிறது. ஆகவே, பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சியோமி 15 அம்சங்கள் (Xiaomi 15 Specifications): இந்த சியோமி போனில் மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core 3nm Snapdragon 8 Elite) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஏஐ பீச்சர்களுடன் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) வருகிறது.

வெளுத்து கட்டியாச்சு.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 5240mAh பேட்டரி!

டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.36 இன்ச் (2670 x 1200 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மட்டுமல்லாமல், சியோமி ஷீல்டு கிளாஸ் (Xiaomi Shield Glass) பாதுகாப்பு கிடைக்கிறது.

இந்த சியோமி 15 போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கிடையாது, இருப்பினும், டூயல் நானோ சிம் சிலாட் மட்டுமல்லாமல், ஈசிம் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த போனில் லெய்கா கேமரா சிஸ்டம் (Leica Camera System) பின்னி எடுக்கின்றன.

ஆகவே, லெய்கா சம்மிலக்ஸ் லென்ஸ் (Leica Summilux Lens) மற்றும் லைட் ஃப்யூஷன் 900 (Light Fusion 900) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஹைப்பர் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா (ஓஐஎஸ் டெக்னாலஜி) கிடைக்கிறது.

இந்த கேமராவில் 8K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆப்டிகல் ஜூமிங் சப்போர்ட் வருகிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டரானது, 4K வீடியோ ரெக்கார்டிங்குடன் கிடைக்கிறது. இந்த சியோமி 15 போனின் பேட்டரி சிஸ்டம் பிரீமியமாக இருக்கிறது. ஆகவே, 5240mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுபோக 10W வயர்லெஸ் ரிவர் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த சியோமி 15 போனில் IP68 டஸ்ட் & வாட்டர்ப்ரூப், அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), மேலும், டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் உள்ளது.

இப்போது, குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.90,665ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.99,830ஆகவும் இருக்கிறது. இந்தியாவில் இந்த சியோமி 15 போன் வரும் மார்ச் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த மாடல் மட்டுல்லாமல், சியோமி 15 அல்ட்ரா வெளியாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 15 With 50MP Camera 12GB RAM Launched Globally Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X