Home
Mobile

கொஞ்சம் பொறுங்க.. 200எம்பி கேமரா.. 512ஜிபி மெமரி.. வருகிறது தரமான Xiaomi 5ஜி போன்.. எந்த மாடல்?

சியோமி நிறுவனம் தனது சியோமி 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) ஸ்மார்ட்போனை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அறிமுகம் செய்யும் என் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த சியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த சியோமி போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கொஞ்சம் பொறுங்க.. வருகிறது தரமான Xiaomi 5ஜி போன்.. எந்த மாடல்?

சியோமி 15 அல்ட்ரா அம்சங்கள் (Xiaomi 15 Ultra Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset) உடன் சியோமி 15 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

குறிப்பாக 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை ஷஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதி கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் டால்பி ஆடியோ அம்சத்துடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் சியோமி 15 அல்ட்ரா போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக HyperOS 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த சியோமி 15 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

1 இன்ச் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 200எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே டிஎஸ்எல்ஆர் கேமராக்களை போல இந்த போனில் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

5000எம்ஏஎச் பேட்டரி உடன் சியோமி 15 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு யுஎஸ்பி டைப்-சி போர்ட், 5ஜி (5G), 4ஜி எல்டிஇ (4G LTE), வைஃபை 7 (Wi-Fi 7), புளூடூத் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக ஒஎல்இடி டிஸ்பிளே உடன் சியோமி 15 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கேமிங் சிப் இந்த போனில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் சியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 15 Ultra with Snapdragon 8 Elite chip will be launched in February 2025: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X