Home
Mobile

மார்கெட் காலி.. QUAD டிஸ்பிளே.. 200MP கேமரா.. 6000mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 16GB ரேம்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படி 200 எம்பி டெலிபோட்டோ கேமரா, குவாட் கர்வ்ட் டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், 16 ஜிபி ரேம் போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் சியோமி 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) களமிறங்க இருக்கிறது. இந்திய வெளியீடு இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த சியோமி 15 அல்ட்ரா எப்போது வெளியாகிறது? பீச்சர்கள் மற்றும் விலை எப்படி? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சியோமி 15 சீரிஸ் (Xiaomi 15 Series) போன்களுக்கான எதிர்பார்ப்பு உலகளவில் அதிகரித்து இருக்கிறது. இதுவரை வெளியான சியோமி மாடல்களிலேயே கேமரா பீச்சர்களில் பின்னிப்பெடல் எடுக்கும்படி இந்த மாடல்கள் இருக்கப் போகின்றன. அதிலும் சியோமி 15 அல்ட்ரா கேமரா மட்டுமல்லாமல், டிஸ்பிளே, பேட்டரி, சிப்செட் பீச்சர்களிலும் மூக்கில் விரல் வைக்க செய்ய இருக்கிறது.

மார்கெட் காலி.. QUAD டிஸ்பிளே.. 200MP கேமரா.. 6000mAh பேட்டரி மாடல்!

இந்த போனின் குளோபல் வெளியீடு மார்ச் 2ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேதியிலேயே இந்திய மார்கெட்டிலும் வெளியாகும் என்று சியோமி இந்தியா நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. இதனால், சியோமி பிரியர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரியர்களும் வெயிட்டிங் மோடில் காத்திருக்கின்றனர். இதில் 2 மாடல்கள் வெளியாக இருக்கிறது.

ஆகவே, சியோமி 15 மற்றும் சியோமி 15 அல்ட்ரா ஆகியவை எதிர்பார்க்கலாம். இந்த மாடல்களின் டிசைன் மற்றும் பீச்சர் விவரங்கள் மார்கெட்டில் கசிந்துவிட்டன. இதில் சியோமி 15 அல்ட்ரா மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. ஆகவே, அந்த போனின் கசிந்த பீச்சர்களை பார்த்துவிட்டு, இந்த மாடலின் விலை எப்படி இருக்கும் என்பதையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சியோமி 15 அல்ட்ரா அம்சங்கள் (Xiaomi 15 Ultra Specifications): இந்த சியோமி போனில் 6.73 இன்ச் குவாட் கர்வ்ட் டிஸ்பிளே அமோலெட் (AMOLED) கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஏஐ பீச்சர்களை கொண்ட சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) வருகிறது.

பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கிடைக்கும்படி ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Snapdragon 8 Elite 3nm) சிப்செட் கிடைக்க இருக்கிறது. இந்த சியோமி 15 அல்ட்ரா போனில் 50 எம்பி மெயின் கேமரா + 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட பிரீமியம் குவாட் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.

மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 900 (Sony LYT 900) சென்சார், பெரிஸ்கோப் கேமராவில் சாம்சங் எச்பி9 (Samsung HP9), அல்ட்ரா வைடு கேமராவில் சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சார் மற்றும் டெலிபோட்டோவில் சோனி ஐஎம்எக்ஸ் 858 (Sony IMX858) சென்சாரும் வருகிறது. ஆகவே, போட்டோகிராபியில் டிஎஸ்எல்ஆருக்கு நிகரான அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

இந்த சியோமி 15 அல்ட்ரா போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. இந்த சியோமி போனின் ஆரம்ப விலை ரூ.78,000 பட்ஜெட்டில் இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 15 Ultra With 50MP Camera To Launch in India on March 2 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X