Home
Mobile

மிரளுது விற்பனை.. ரூ.10,000 ரேட் கட்ல QUAD கர்வ்ட் டிஸ்பிளே.. 200MP கேமரா.. 5410mAh பேட்டரி.. எந்த மாடல்?

200 எம்பி டெலிபோட்டோ கேமரா, 50 எம்பி சோனி சென்சார் மெயின் கேமரா, 50 எம்பி ப்ளோட்டிங் டெலிபோட்டோ கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா போன்ற குவாட் ரியர் கேமரா சிஸ்டம் மட்டுமல்லாமல், 8K வீடியோ ரெக்கார்டிங், 120X டிஜிட்டல் ஜூமிங் போன்ற பீச்சர்களுடன் டிஎஸ்எல்ஆர் கேமராவை தூக்கி சாப்பிடும்படி மார்கெட்டில் களமிறங்கிய சியோமி 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) போனின் விற்பனை தொடங்கி இருக்கிறது. இந்த பிரீமியம் மாடலின் விவரங்கள் இதோ.

இந்திய மார்கெட்டில் அல்ட்ரா பிரீமியம் மாடலாக வெளியாகிய இந்த சியோமி 15 அல்ட்ரா போனின் விற்பனை அமேசான் (Amazon) தளத்தில் தொடங்கி இருக்கிறது. ரூ.10,000 பேங்க் டிஸ்வுண்ட் போக விற்பனைக்கு வந்துள்ளதால், சியோமி பிரியர்கள் குஷியாகிவிட்டனர். இந்த சியோமி போனின் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,09,999ஆக இருக்கிறது.

மிரளுது விற்பனை.. ரூ.10,000 ரேட் கட்ல QUAD கர்வ்ட் டிஸ்பிளே மாடல்!

இந்த விலையில் ரூ.10,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ அல்லது ஃபுல் கேஷ் செலுத்தி வாங்கும் கஸ்டமர்களுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.99,999 பட்ஜெட்டில் இப்போது ஆர்டருக்கு கிடைக்கிறது. இவ்வளவு விலைக்கு ஏற்ப பீச்சர்களும் அல்ட்ரா பிரீமியமாக இருக்கின்றன. முதலில் கேமராவில் தொடங்குவோம்.

சியோமி 15 அல்ட்ரா அம்சங்கள் (Xiaomi 15 Ultra Specifications): இந்த சியோமியில் லைக்கா சம்மிலக்ஸ் ஆப்டிகல் லென்ஸ் கொண்ட குவாட் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. ஆகவே, சோனி எல்ஒய்டி 900 (SONY LYT 900) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட 200 எம்பி அல்ட்ரா டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.

இதுபோக 50 எம்பி ப்ளோட்டிங் டெலிபோட்டோ கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. ப்ளோட்டிங் டெலிபோட்டோவிலும் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. இந்த குவாட் கேமராவில் 120X டிஜிட்டல் ஜூமிங், 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது. மோஷன் டிராக்கிங், ஐ டிராக்கிங் சப்போர்ட் கிடைக்கிறது.

4K மற்றும் டால்பி விஷன் கொண்ட 32 எம்பி செல்பீ ஷூட்டர் இருக்கிறது. ஹை-டிரான்ஸ்மிட்டன்ஸ் லென்ஸ், ஆன்டி-ரெப்ளெக்சன் கோட்டிங், ஆன்டி-கிளார் லென்ஸ் கோட்டிங், இன்பிராரெட் லைட் ஃபில்டர் மற்றும் ஈங்க் கோட்டிங் டெக்னாலஜி போன்ற பிரீமியம் லென்ஸ் டெக்னாலஜிகள் கிடைப்பதால், டிஎஸ்எல்ஆர் லெவல் அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

சினிமாடிக் ஸ்லோவ் மோஷன் (Cinematic Slow Motion), ஸ்ட்ரீட் போட்டோகிராபி (Street Photography) போன்ற பிரீமியம் லெவல் வீடியோகிராபி மற்றும் போட்டோகிராபி பீச்சர்களும் கிடைக்கின்றன. 6.73 இன்ச் (3100 x 1440 பிக்சல்கள்) குவாட் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சியோமி ஷீல்டு கிளாஸ் 2.0 பாதுகாப்பு மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட், 522 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. வெட் டச் டெக்னாலஜி (Wet Touch Technology) மற்றும் ப்ரோ எச்டிஆர் (Pro HDR) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது.

அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm SoC) சிப்செட் மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2.0 (Xiaomi HyperOS 2.0) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப 5410mAh பேட்டரி, 90W சார்ஜிங் மற்றும் 80W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 15 Ultra With 50MP Camera Sale Under Rs 100000 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X