DSLR கேமரா கதை முடிந்தது.. 200MP பெரிஸ்கோப், 5410mAh பேட்டரி, 16GB ரேம்.. Xiaomi-யின் புதிய மாடல்.. என்ன விலை?
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டு பிளாக்ஷிப் மாடல் ஆன ஷாவ்மீ 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) ஸ்மார்ட்போன் நேற்று (மார்ச் 2 ஆம் தேதி) உலகளாவிய சந்தைகளில் அறிமுகமானது. இது 16ஜிபி வரையிலான ரேம், 200எம்பி ப்ரைமரி கேமரா, 5410mAh பேட்டரி உட்பட பல முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. ஷாவ்மீ 15 அல்ட்ராவின் விரிவான அம்சங்கள் என்னென்ன? இதன் விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:
ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,36,100 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதோடு சேர்ந்து அறிமுகமான ஸ்டாண்டர்ட் ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் சுமார் ரூ.90,700 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ்விரு ஸ்மார்ட்போன்களும் எப்போது இந்தியா உட்பட மற்ற பிராந்தியங்களில் வாங்க கிடைக்கும் என்பது தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக சலுகைகளை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனை வாங்கிய முதல் வருடத்திற்குள், லேபர் காஸ்ட் இல்லாத அவுட்-ஆப்-வாரண்டியின் கீழ் ரிப்பேர்-ஐ வழங்குவதாக ஷாவ்மீ கூறுகிறது. மேலும் முதல் 6 மாதங்களுக்குள் இலவச ஸ்க்ரீன் ரீப்பிளேஸ்மென்ட்டையும் வழங்குகிறது.
ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவுடன் வருகிறது. மேலும் இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஷாவ்மீயின் ஹைப்பர் ஓஎஸ் 2 கொண்டு இயங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கு 4 மேஜர் ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காமின் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான LPDDR5x ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3200நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.73-இன்ச் WQHD+ (1440 x 3200 பிக்சல்ஸ்) குவாட் கர்வ்டு LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது
கேமராக்களை பொறுத்தவரை சியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் லைக்கா பிராண்டால் ட்யூன் செய்யப்பட்ட 4 கேமரா செட்டப் உள்ளது. இது 1 இன்ச் டைப் LYT-900 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது.
கூடவே இது 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா, ஓஐஎஸ் மற்றும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி IMX858 டெலிஃபோட்டோ கேமரா சென்சார் மற்றும் ஓஐஎஸ் மற்றும் 4.3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் உடன் 200-மெகாபிக்சல் ஐசோசெல் HP9 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 512ஜிபி UFS 4.1 ஸ்டோரேஜை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 7, ப்ளூடூத் 6, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி 3.2 ஜென் 2 டைப்-சி போர்ட் ஆகியவற்றை வழங்குகிறது.
பேட்டரியை பொறுத்தவரை 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 80W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,410mAh சிலிக்கான் கார்பன் பேட்டரியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சேஸ் ஆனது ஏரோஸ்பேஸ்-கிரேடு கிளாஸ் ஃபைபரை பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி68 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. கடைசியாக ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் போர்டில் உள்ள சென்சார்களை பொறுத்தவரை ஆக்ஸலரோமீட்டர், கைரோஸ்கோப், ப்ராக்ஸிமிட்டி சென்சார், காம்பஸ், பேரோமீட்டர் மற்றும் இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் ஆகியவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications