சீனாக்காரன் செஞ்சி விட்டான் யா.. சாட்டிலைட் கனெக்டிவிட்டி உடன் புதிய Xiaomi போன்.. எந்த மாடல்?
அப்புறம் என்னப்பா ஒரு நல்ல ஸ்மார்ட்போன்-ஆ பார்த்து வாங்கிடலாமா? என்கிற முடிவுக்கு யாருமே வர முடியாது. ஏனென்றால் இனிமேல் தான் 2025 ஆம் ஆண்டின் மிக முக்கியமான அறிமுகங்கள் எல்லாம் நிகழ உள்ளன. அதில் ஷாவ்மீ நிறுவனத்தின் ஷாவ்மீ 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) ஸ்மார்ட்போனும் அடங்கும்.
நீண்ட நாட்களாக விரைவில் வரும் என்று மட்டுமே கூறப்பட்டு வந்த ஷாவ்மீ 15 அல்ட்ரா சரியாக எப்போது அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தேதி லீக் ஆகியுள்ளது. கூடவே இது சாட்டிலைட் கனெக்ஷன் உட்பட பல முக்கிய அம்சங்களை பேக் செய்யலாம் என்கிற விவரங்களும் வெளியாகியுள்ளன. ஷாவ்மீ 15 அல்ட்ரா எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

ஷாவ்மீ 15 அல்ட்ரா எப்போது உலகளவில் அறிமுகமாகும்? சீன சமூக ஊடக வலைத்தளம் வழியாக ஷாவ்மீயின் நிறுவனர், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷாவ்மீ 15 சீரீஸ் ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ளார். ஷாவ்மீயின் இந்த கேமரா சென்ட்ரிக் ஸ்மார்ட்போன் ஆனது ஷாவ்மீ எஸ்யு7 எலெக்ட்ரிக் இவி (Xiaomi SU7 Ultra EV) கார் உடன் சேர்ந்து அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
சரியான வெளியீட்டு தேதி மற்றும் நேரம் வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும் கூட, இது வருகிற பிப்ரவரி 26 அன்று மாலை 7:00 மணிக்கு சீனாவில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் 2025 மார்ச் முதல் வாரத்தில் பார்சிலோனாவில் எம்டபுள்யூசி (MWC) நிகழ்வின் போது, ஷாவ்மீ 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் உலகளாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஷாவ்மீ 15 அல்ட்ரா என்னென்ன அம்சங்களை பேக் செய்யலாம்? இது 16ஜிபி ரேம் உடனாக, ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 15 உடன் வரலாம். கேமராக்களை பொறுத்தவரை ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும்.
அதில் இது 50-மெகாபிக்சல் 1-இன்ச் டைப் LYT-900 சென்சார், 50-மெகாபிக்சல் சாம்சங் ISOCELL JN5 அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா, 50-மெகாபிக்சல் Sony IMX858 டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 4.3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 200-மெகாபிக்சல் சாம்சங் ISOCELL HP9 சென்சார் ஆகியவைகள் இடம்பெறலாம்
மேலும் இது IP68 + IP69 ரேடட் கட்டமைப்பை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சமீபத்திய லீக் ஆனது ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் சாட்டிலைட் கனெக்டிவிட்டி இருக்கும் என்று பரிந்துரைக்கிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 2K குவாட்-கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். கடைசியாக இது 90W வயர்டு சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கலாம்.
ஷாவ்மீ 15 அல்ட்ரா என்ன விலைக்கு அறிமுகமாகும்? சீனாவில் இது, இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.78,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவே இந்தியாவில் ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.1,09,990 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிப்ரவரி 2025 இல் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன? ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R): இது ரூ.30,000 செக்மென்ட்டில் அறிமுகம் செய்யப்படலாம். சாம்சங் கேலக்ஸி ஏ36 (Samsung Galaxy A36) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ56 (Samsung Galaxy A56). இவ்விரு ஸ்மார்ட்போன்களும் முறையே ரூ.32,990 மற்றும் ரூ.43,990 க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ பைண்ட் என்5 (Oppo Find N5) மற்றும் ஒன்பிளஸ் ஓப்பன் 2 (OnePlus Open 2). சீனாவில் ஒப்போ பைண்ட் என்5 ஆக அறிமுகம் மாடல் உலகின் மற்ற சந்தைகளில் ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஆக அறிமுகம் செய்யப்படும். இந்தியாவில் ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,39,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். டெக்னோ கர்வ் (TECNO Curve). இது ரூ.10,000 - ரூ.20,000 செக்மென்ட்டில் அறிமுகப்படுத்தலாம்.
ஆசஸ் ஆர்ஓஜி போன் 9 சீரீஸ் (ASUS ROG Phone 9 Series): இந்த சீரிஸின் கீழ் ஆசஸ் ஆர்ஓஜி போன் 9 (ASUS ROG Phone 9) மற்றும் ஆசஸ் ஆர்ஓஜி போன் 9 ப்ரோ (Asus ROG Phone 9 Pro) என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம். விவோ வி50 (Vivo V50) ஸ்மார்ட்போனும் இந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் ஆகிறது. இது ரூ.37,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








