வாங்குனா இந்த புதிய Xiaomi போன் வங்கனும்.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
புதிய சியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்த தகவல் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதாவது வரும் பிப்ரவரி 26-ம் தேதி சீனாவில் இந்த சியோமி 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் Weibo இல் கசிந்த போஸ்டரில் இந்த போனின் அறிமுகம் குறித்த தகவல் வெளியானது.
அதேபோல் உலக சந்தையில் வரும் மார்ச் 3-ம் இந்த புதிய சியோமி 15 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த சியோமி போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

சியோமி 15 அல்ட்ரா அம்சங்கள் (Xiaomi 15 Ultra Specifications): OLED டிஸ்பிளே உடன் சியோமி 15 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (Satellite communication technology) இந்த போனில் இருக்கும் கூடுதலாக, இது இசிம் (eSIM) செயல்பாட்டை கொண்ட சியோமியின் முதல் அல்ட்ரா-சீரிஸ் ஸ்மார்ட்போனாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் 1 இன்ச் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 200எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா ஆதரவுடன் சியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே டிஎஸ்எல்ஆர் கேமராக்களை போல இந்த போனில் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset)உடன் சியோமி 15 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்களை இந்த
போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.
குறிப்பாக 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை ஷஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதி கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் டால்பி ஆடியோ அம்சத்துடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் சியோமி 15 அல்ட்ரா போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக HyperOS 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த சியோமி 15 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
சியோமி 15 அல்ட்ரா போன் 6000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு யுஎஸ்பி டைப்-சி போர்ட், 5ஜி (5G), 4ஜி எல்டிஇ (4G LTE), வைஃபை 7 (Wi-Fi 7), புளூடூத் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த புதிய சியோமி போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications