கேமரா அசுரன்.. 90W சார்ஜிங்.. 200எம்பி கேமரா.. வருகிறது புதிய Xiaomi போன்.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் விரைவில் சியோமி 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த போனின் புகைப்படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. குறிப்பாக சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போனை விட வித்தியாசமாக உள்ளது இந்த புதிய சியோமி 15 அல்ட்ரா போன்.
அதேபோல் பஞ்ச் ஹோல் டிஸ்பிளே உடன் இந்த சியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் இந்த போன் வெளிவரும். குறிப்பாக மற்ற போன்களை விட தனித்துவமான கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது புரிய சியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

சியோமி 15 அல்ட்ரா அம்சங்கள் (Xiaomi 15 Ultra specifications): 50எம்பி சோனி பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 200எம்பி டெலி போட்டோ ஜூம் லென்ஸ் + 50எம்பி பெரிஸ்கோப் லென்ஸ் என்கிற நான்கு பின்புற கேமரா அமைப்புடன் இந்த சியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே டிஸ்எல்ஆர் கேமராக்களை போன்று மிகவும் தெளிவான படங்களை இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் எடுக்க முடியும்.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் எனறே 32எம்பி கேமராவை கொண்டுள்ளது இந்த புதிய சியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போனின் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
6.7-இன்ச் 2கே எல்டிஒபி (2K LTPO) மைக்ரோ-குவாட்-கர்வ்டு டிஸ்பிளே (Micro-quad-curved Display) உடன் இந்த புதிய சியோமி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Quallcomm Snapdragon 8 Elite) சிப்செட் உடன் சியோமி 15 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதபோல் இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

IP69 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant), அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சார், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos)போன்ற அம்சங்களுடன் இந்த சியோமி போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
HyperOS 2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும். பின்பு 6000mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சியோமி 15 அல்ட்ரா போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
photo credit: smartprix.com


Click it and Unblock the Notifications








