பிப். 2025 வரை பொறுங்க.. 6000mAh பேட்டரி, eSIM அதரவு, பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா.. புது Xiaomi போன்!
ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட ஒன்பிளஸ் 13 (OnePlus 13), நாளை (ஜனவரி 22 ஆம் தேதி) அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S15) ஆகிய மாடல்களுக்கு பெரிய போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு ஷாவ்மீ ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது; அதுவும் அடுத்த 2025 பிப்ரவரி மாதமே!
அது ஷாவ்மீ 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) ஸ்மார்ட்போனாகும். ஷாவ்மீ 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra) ஸ்மார்ட்போன் ஆனது பிப்ரவரி 2024 இல் வெளியிடப்பட்டதால் இதுவும் 2025 பிப்ரவரியில் தான் அறிமுகமாகும் என்கிற யூகங்கள் தற்போது உண்மையாகி உள்ளது.

ஷாவ்மீயின் தலைவர் மற்றும் அதன் ஸ்மார்ட்போன் பிரிவின் பொது மேலாளர் ஆன லு வெய்பிங் (Lu Weibing), ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது பிப்ரவரி 2025 இல் அறிமுகம் (Xiaomi 15 Ultra Launch Feb 2025) செய்யப்படும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். சீன சமூக ஊடகத்தளமான வெய்போ (Weibo) வழியாக ஷாவ்மீ 15 அல்ட்ராவின் லான்ச் டைம்லைனை பகிர்ந்துள்ளார்.
லு வெய்பிங்கின் கூற்றுப்படி, ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 2025 ஜனவரி இறுதியில் தொடங்கும் சீன வசந்த விழாவிற்கு (Chinese Spring Festival) பிறகு விரைவில் அறிமுகமாகும். இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் அதே நேரத்தில் உலகளாவிய விற்பனைக்கும் (Xiaomi 15 Ultra Global Sale) கிடைக்கும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
லு வெய்பிங், ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதியை (Xiaomi 15 Ultra Launch Date) வெளியிடவில்லை என்றாலும் கூட, பெரும்பாலும் இது பிப்ரவரி பிற்பகுதியில் திட்டமிடப்பட்ட பார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2025 நிகழ்வில் (Mobile World Congress 2025 - MWC 2025) காட்சிப்படுத்தப்படுவதற்கான சாத்தியத்தை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் ஷாவ்மீ 15 அல்ட்ராவின் முக்கிய அம்சங்கள் பற்றி அவர் எதையும் வெளிப்படுத்தவில்லை.
ஆனால் ஷாவ்மீ 15 அல்ட்ரா வின் டிசைன் மற்றும் அம்சங்கள் குறித்து ஏற்கனவே போதுமான தகவல்கள் நம்மிடம் உள்ளன. ஷாவ்மீ 15 அல்ட்ராவானது, அதன் முன்னோடியில் காணப்பட்ட சிக்னேச்சர் சர்க்கிள் கேமரா யூனிட்டை தக்க வைத்துக் கொள்ளும். அதுவொரு குவாட் ரியர் கேமரா செட்டப் ஆக இருக்கும். இதன் கேமரா செட்டப்பின் மேல்-வலது மூலையில் ஒரு பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் (Periscope Telephoto Lens) இடம்பெறும். அதனுடன் மூன்று கூடுதல் லென்ஸ்கள் கேமரா செட்டப்பின் கீழ் பகுதியில் வைக்கப்படும்
ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் தொழில்நுட்பத்துடனான 2கே மைக்ரோ-கர்வ்டு டிஸ்ப்ளே இடம்பெறும். சிப்செட்டை பொறுத்தவரை இது தடையற்ற செயல்திறனுக்காக ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட்டை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஒரு பெரிய 6,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் மற்றும் 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும்.
ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது பிரீமியம் கைவினைத்திறனை பிரதிபலிக்கும் வகையில், வேகன் லெதர் (Vegan Leather), பைபர்கிளாஸ் (Fibergass) மற்றும் செராமிக் (Ceramic) உள்ளிட்ட ஆடம்பரமான பினிஷ்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (Satellite communication technology) இருக்கும் கூடுதலாக, இது இசிம் (eSIM) செயல்பாட்டை கொண்ட ஷாவ்மீயின் முதல் அல்ட்ரா-சீரிஸ் ஸ்மார்ட்போனாகவும் இருக்கும்.
ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பிஐஎஸ் (BIS) சான்றிதழை ஏற்கனவே பெற்றுவிட்டதால் இது இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். விலையை (Xiaomi 15 Ultra Price in India) பொறுத்தவரை இது ரூ.1,09,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம், ஷாவ்மீ 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.99,900 க்கு அறிமுகமானது.


Click it and Unblock the Notifications








